புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2011



ஐ.பி.எல்.: பெங்களூர் அணி சென்னையை வீழ்த்தியதுஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரில் நடந்த ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.


முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டோனி 70 ரன்கள் (40 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) குவித்தார்.
அடுத்து களம் இறங்கிய பெங்களூர் அணி 18 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கெய்ல் 75 ரன்கள் (50 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். கோக்லி 31 ரன்கள், திவாரி 13 ரன்கள் எடுத்தனர்.

ஜெயலலிதா முதலமைச்சரானதில் இலங்கையை விட இந்தியாவுக்கே அதிக அழுத்தம்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011, 11:03.32 AM GMT ]
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜெயலலிதா தெரிவு செய்யப்பட்டதன் மூலம் இலங்கையை விட  இந்தியாவுக்கே அழுத்தங்கள் அதிகரித்திருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.
சிங்கள வாராந்தப் பத்திரிகையான சிலுமிண பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவைப்  பொறுத்தவரை தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் அனைவரும் இலங்கைப் பிரச்சினை குறித்து உணர்வுபூர்வமான கருத்துக்களை வெளியிட்டு தங்கள் அரசியல் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவே முனைகின்றனர்.
கடந்த சட்டசபைத் தோ்தலிலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் இந்நாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் கருத்துக்களை நாம் அந்த வகையில் வைத்துத்தான் பார்க்க வேண்டும்.ஆயினும் அவர்களால் அதற்கு அப்பால் எதுவும் செய்ய முடியாது.
நாம் தனியானதோர் நாடு. நமது பிரச்சினைகளை நாம் தான் தீர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் எவர் என்ன சொன்னாலும் நம் நாட்டின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை நாம் தான் உருவாக்க வேண்டும்.
இதே ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் தான் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அந்த வகையில் ஜெயலலிதா தோ்தலுக்கு முன் என்ன சொல்லியிருந்தாலும் இனிவரும் காலங்களில் விடுதலைப் புலி ஆதரவு சக்திகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே இருப்பதை மறந்து விடக்கூடாது.
அதே போன்று இந்திய அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தவரை ஜெயலலிதா முதலமைச்சரானது ஒரு அழுத்தத்தைப் பிரயோகிக்கும் விடயமாக இருக்கலாம். ஆனால் நம்நாட்டிற்கு அவரால் எந்தவித அழுத்தத்தையும் பிரயோகிக்க முடியாது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது பேட்டியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையினால் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் யுத்தக் குற்றச் செயல்கள் பற்றி விசாரணை நடத்தலாம்: ஐ.நா. பேச்சாளர் மார்ட்டின் நெசர்கி
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011, 11:27.40 AM GMT ]
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையினால் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் யுத்தக் குற்றச் செயல்கள் பற்றி விசாரணை நடத்தலாம் என ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின்  நெசர்கி குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அல்லது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஆகிய கிளை அமைப்புக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் யுத்தக் குற்றச் செயல்கள் பற்றி விசாரணை நடத்தலாம் ஐ. நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்கி சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறில்லாதபோது இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் மட்டுமே இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் முதன்மை அதிகாரம் இலங்கை அராசங்கத்திடம் காணப்படுகின்றது. குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் மற்றும் விசாரணை நடத்தும் அதிகாரம் உள்நாட்டு அரசாங்கங்களுக்கே வழங்கப்படுகின்றன என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும்  30ம் திகதி தொடக்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சிலின் அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன. அவ்வாறான நிலையில் இலங்கை தொடர்பான பல போர்க்குற்ற ஆதாரங்களை புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மனித உரிமைக்கவுன்சிலுக்கு சமர்ப்பித்துள்ளன.
அவ்வாறான நிலையில் மனித உரிமைக்கவுன்சில் கோரிக்கை விடுத்தாலும் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஐ.நா. பேச்சாளர் தெரிவித்திருப்பது பெரும் நம்பிக்கைக் கீற்றாக இருப்பதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

பிரதமர் விருந்து: மத்திய அமைச்சர்கள் புறக்கணிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011, 04:10.36 PM GMT +05:30 ]
மன்மோகன்சிங் தலைமையிலான கூட்டணி அரசு 2ம் ஆண்டு நிறைவு விழா இரவு விருந்தில் தி.மு.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி அமைச்சர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது.
நாட்டை மட்டுமின்றி உலகையே உலுக்கிய "2ஜி" ஸ்பெக்ட்ரம் ஊழல், பொருளாதார சீர்திருத்தங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணாதது போன்ற சூழலில் பிரதமர் மன்மோகன் சிங்(79) தலைமையில் இரண்டாவது முறையாக பதவியேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மூன்றாவது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது.
கடந்த 2004 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதன்பின் 2009 தேர்தலிலும் இந்தக் கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மன்மோகன் சிங் மீண்டும் பிரதமரானார்.
2வது முறையாக ஆட்சி அமைத்த ஐ.மு கூட்டணி அரசு கடந்த எட்டு மாதங்களில் பலவிதமான சர்ச்சைகளில் சிக்கியது. ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், மகாராஷ்டிரா ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் உட்பட பல வகையான ஊழல் புகார்கள் மன்மோகன் சிங் அரசு மீது கூறப்பட்டன.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றும் போது இடதுசாரிகளின் ஆதரவை இழந்த பிரதமர் அதை விட மிகவும் சிக்கலான நெருக்கடிக்கு உள்ளானது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் வெளியான இக்காலகட்டத்தில் தான்.
பொருளாதார மேதைகளான மன்மோகன் சிங், சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, மாண்டேக் சிங் அலுவாலியா போன்றவர்கள் அதிகாரத்தில் இருந்தும் கூட அடித்தட்டு மக்களால் தாங்க முடியாத அளவிற்கு விலைவாசி விண்ணை முட்டியது.
விலைவாசியைக் குறைக்க இயலாமல் மத்திய அரசு விழிபிதுங்கியது. நாட்டின் பல்வேறு உணவுக் கிடங்குகளில் தானியங்கள் பாழாகிக் கொண்டிருந்த வேளையில் மத்திய விவசாய அமைச்சர் அவற்றை வினியோகிப்பதில் போதுமான அக்கறை காட்டாததை சுப்ரீம் கோர்ட் சுட்டிக் காட்டி கண்டனம் தெரிவித்தது.
இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் மும்பையில் நடந்த சில குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான வாசுர் கமார் கான் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தும் கூட பாகிஸ்தானிடம் மத்திய அரசு அளித்த தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் கானின் பெயர் சேர்க்கப்பட்டதும், அரசின் செயல்பாட்டில் பெரும் குளறுபடிகள் நடந்து கொண்டிருப்பதை வெட்டவெளிச்சமாக்கின. ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் வழக்கம் போல சாக்குபோக்கு சொல்லி இவ்விவகாரத்தைச் சமாளித்தார்.
ஊழல் புகார் உட்பட பலவிதமான புகார்களால் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கும் மன்மோகன் சிங் அரசு வரும் ஆண்டுகளில் மேலும் பல சவால்களையும், சிக்கல்களையும் சந்திக்க நேரிடும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில் ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் பாதியளவுக்கு நிம்மதியைத் தந்ததுள்ளன. அசாமில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதும், கேரளாவில் புதிய அரசு அமைத்ததும், மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலும் ஆட்சிப் பொறுப்பேற்றதும் அதற்கு காரணம்.
இந்த திருப்தி நிலை தொடர வேண்டும் எனில் இரண்டாவது முறையாக பதவியேற்று இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மன்மோகன் சிங் அரசு மக்களின் மனநிலையை உணர்ந்து அதற்கேற்ற வகையில் நல்ல பல பணிகளைச் செய்ய வேண்டும். இதுவே பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு

ஊழல் குற்றம் புரிந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்: சோனியா
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011, 04:56.55 PM GMT +05:30 ]
ஊழல் குற்றம் புரிந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதிபடத் தெரிவித்தார் சோனியா காந்தி.
இன்று மாலை ஐ.மு கூட்டணி அரசு இரண்டாவது முறையாகப் பதவிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்ததை ஒட்டி நடைபெற்ற புதுடெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் "ஐ.மு கூட்டணி அரசு: நாட்டு மக்களுக்கான அறிக்கை" என்பதை வெளியிட்டுப் பேசும் போது சோனியா இதைத் தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் வெறும் பேச்சளவில் மட்டும் இல்லாமல் செயலளவிலும் கண்டிப்புடன் எடுக்கப்படும் என்றார் அவர். மேலும் அவர் கூறியதாவது:
1. நேர்மை, நாணயம், வெளிப்படைத்தன்மை, கடமை, பொறுப்பு - இவையே எங்கள் அரசாட்சியின் முக்கிய அம்சங்கள்.
2. பொறுப்புள்ள, செயல்தன்மையுள்ள அரசையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டின.
3. மாபெரும் பொருளாதார வளர்ச்சி, வாங்கும் சக்திக்கேற்ப அத்தியாவசியப் பொருள்களின் விலை கட்டுக்குள் இருத்தல் இவற்றுக்கே ஐ.மு கூட்டணி அரசு முன்னுரிமை அளிக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: ஐ.மு.கூட்டணி அரசு 7 வருடங்கள் நிலையான ஆட்சியைக் கொடுத்துள்ளது. சமூக முன்னேற்றம், மத நல்லிணக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைக் கொடுத்துள்ளது.
உணவு பெறும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயங்கரவாதம் மிகப் பெரிய சவால. பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராகப் போராட அனைவரும் ஒருங்கிணைவது அவசியம் என்று கருத்து தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

ad

ad