புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மே, 2011


ஈ.பி.டி.பியின் மண் அகழ்வு மோசடி- மேல் முறையீட்டு நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது!

Published on May 23, 2011-3:26 pm   ·   No Comments
வடமராட்சி கிழக்கு அம்பன் குடத்தனை மணல்காடு பகுதிகளில் சட்டவிரோதமக மண் அகழ்ந்தெடுக்கப்படுவதற்கு எதிராக யாழ்ப்பாண குடிமகன் ஒருவர் தாக்கல் செய்துள்ள முறைப்பாடு குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதிவாதிகளிடமிருந்து பதிலை கோரியுள்ளது.
பதில் அறிக்கை ஜூன் மாதம் 13 ஆம் திகதி மன்றில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் 2010 இல் புவியியல் அளவை மற்றும் மண் அகழ்வு பணியகம் வெளியிட்ட சுற்று நிருபம் புஆஃஊஆஃஏஆஃ09 இன்படி, மண் அகழ்வில் ஈடுபடும் யாழ்ப்பாணம் குடிமக்கள் எவரும் கிராமசேவை உத்தியோகத்தர் ஊடாக மாவட்டச்செயலாளருக்கு தங்கள் தேவைகள் பற்றி தெரிவித்து அதற்கான அனுமதி பெற்று இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் யாழ். மாவட்ட செயலாளர் மண் அகழ்வு அனுமதிப்பத்திரத்தை வழங்கும் அதிகாரத்தை ஈ.பி.டி.பி கட்சியின் கீழ் செயற்படும் மகேஸ்வரி நிதியம் என்ற அமைப்பிற்கு வழங்கி உள்ளது. இது அரசாங்க சுற்று நிருபத்திற்கு முரணானது என முறைப்பாட்டாளர் நீதிமன்றத்தில் செய்த தாக்கல் செய்த வழக்கில் தெரிவித்துள்ளார்.
அச்சுற்றுநிருபத்தின்படி, மண் அகழ்வில் ஈடுபடுபவர்கள் ஒரு கியூப் மண்ணுக்கு 286
ரூபா அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மகேஸ்வரி நிதியம் ஒரு கியூப் மண்ணுக்கு 13,400 ரூபா அறவிடுகின்றது. போக்குவரத்து வசதிகளையும் மகேஸ்வரி நிதியம் செய்து கொடுப்பதால் மண் அகழ்வில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொரு கியூப்
மண்ணுக்கும் மேலதிகமாக 19,000 ரூபா செலுத்த வேண்டியுள்ளது. மாதாந்தம் மகேஸ்வரி நிதியம் சட்டவிரோதமான முறையில் கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதிப்பதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் குடிமகன் தாக்கல் செய்திருக்கும் முறைப்பாட்டில் ( முறைப்பாட்டு இலக்கம் ஊயு674ஃ2010)  யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர், நல்லூர் பிரதேச செயலாளர், மகேஸ்வரி நிதிய இணைப்பாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இவர்கள் யூன் 13ஆம் திகதிக்கு முதல் முறைப்பாட்டிற்கான பதிலை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் யூன் 13ஆம் திகதிக்கு முதல் முறைப்பாட்டிற்கான பதிலை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈ.பி.டி.பியினர் மண் அகழ்வில் ஈடுபடுவதால் அக்கிராமங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இந்த விடயத்தை சுட்டிக்காட்டிய அம்பனைச்சேர்ந்த கேதீஸ்வரன் தேவராஜன் என்ற இளைஞரை அம்பன் கிராமத்தில் அவரது வீட்டில் வைத்து ஈ.பி.டி.பியினர் சுட்டுக்கொலை செய்திருந்தனர்.
Share

மட்டக்களப்பில் மீண்டும் இராசதுரையின் பிரசன்னம்!

Published on May 24, 2011-6:06 pm   ·   No Comments
நீண்டகாலமாக அரசியலில் ஈடுபடாது அஞ்ஞாதவாசம் செய்த மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை கடந்த 22 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் மட்டக்களப்புக்கு வந்துள்ளார்.
நீண்டகாலமாக மலேசியாவில் தங்கியிருந்த அவர் அண்மையில் மட்டக்களப்பு வந்துள்ளார். தற்போது மட்டக்களப்பு நகரில் தங்கியிருக்கும் அவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோரை சந்தித்து சமகால அரசியல் நிலமைகள் குறித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பற்றி தந்தை செல்வா கொண்டிருந்த இலக்கு பற்றியும் நினைவு கூர்ந்தார்.
இதே வேளை ஆன்மீகத் தலைவர்கள் சமூகப் பிரமுகர்களைச் சந்தித்து வரும் இவர் தனது கடந்த கால அரசியல் ஆதரவாளர்களையும் சந்தித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள சர்வ மதத் தலங்களையும் தரிசித்து வரும் இவர் கொத்துக்குளம் முத்துமாரியம்மன் ஆலயம், அரசடி பிள்ளையார் ஆலயம், கோட்டமுனை அவுலியா பள்ளி வாசல், புளியந்தீவு அந்தோனியார் ஆலயம் ஆகியவற்றிற்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அவர் 1956ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு தொகுதியின் முதலாவது நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டது தொடக்கம் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் வரைக்கும் உள்ள 5தேர்தல்களிலும் வெற்றி பெற்று 33ஆண்டுகளாக மட்டக்களப்பு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
1979ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக்கூட்டணி தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அரசாங்கத்துடன் இணைந்து பிரதேச அபிவிருத்தி இந்து கலாச்சார அமைச்சரானார்.

யாழ். மாவட்ட வாக்காளர் பட்டியிலிலிருந்து வெளிநாட்டில் வசிப்பவர்களின் பெயர்கள் நீக்கம்!

Published on May 24, 2011-5:08 pm   ·   No Comments
யாழ். மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயந்தவர்கள் என யாழ். மாவட்டத் தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வாக்காளர் பட்டியல் மீளாய்வுப் பணிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்று தற்போது பட்டியல் தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.   இதுவரை மேற்கொள்ளப்பட்ட மீளாய்வுகளின்படி சுமார் 4 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்களின் விவரங்கள் நீக்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்குச் சென்று அங்கு வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளவர்கள் மரணமானவர்கள். அத்துடன் இங்கிருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்பவர்கள் ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதில் வெளிநாடுகளில் உள்ளவர்களின் பெயர்களே அதிகளவில் நீக்கப்பட்டிருப்பதாகவும் வெளிநாடுகளில் உள்ள சுமார் 3 இலட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

ad

ad