புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2012

காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய முதலமைச்சரே கிழக்கிற்கு தேவை: சம்பந்தன்
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 02:23.39 AM GMT ]
காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய முதலமைச்சரே கிழக்கிற்கு தேவை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மாகாணசபை முறைமையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானதல்ல.
ஆளுனருக்கே கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 60 ஆண்டுகளுக்கு முன்னர் செல்வநாயகம் உரிமை போராட்டத்தை ஆரம்பித்தார்.
மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் இளைஞர்களின் தியாகம் காரணமாக வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த மாகாணசபையொன்று உருவானது. இவ்வாறு உருவாக்கப்பட்ட மாகாணசபைகளை யாருக்கும் தாரை வார்ப்பது சரியானதா?
மாகாணசபைகளுக்கு உரிய அதிகாரங்களை வழங்க அரசாங்கம் விரும்பவில்லை. குறிப்பாக காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்க அரசாங்கம் விரும்பவில்லை.
இந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மூதூர் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad