புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஆக., 2012


சாலையில் 10 ரூபாய் நோட்டுகளை வீசி விவசாயிடம் 1 லட்சம் கொள்ளை 
கடலூர் அருகே கோதண்ட ராமபுரத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 62). விவசாயி. சம்பவத் தன்று இவர் கடலூர் முதுநகரில் உள்ள வங்கிக்கு வந்தார். அங்கு நகையை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை பெற்று அதனை காரின் முன்பக்க
பகுதியில் வைத்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனார். காரை டிரைவர் செல்வராஜ் என்பவர் ஓட்டிவந்தார்.

கார் 5 கிணற்று மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது அங்குள்ள செல்போன் ரீசார்ச்ஜ் கடை எதிரே காரை நிறுத்தி தனது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்து வரும்படி தட்சிணாமூர்த்தி டிரைவரை அனுப்பி வைத்தார்.

அப்போது அந்த வழியாக நடந்து சென்ற டிப்-டாப் ஆசாமி ஒருவன் கார் கதவை தட்டி ரோட்டில் 10 ரூபாய் நோட்டுகள் கிடக்கிறது. உங்களுடையதா என்று தட்சிணா மூர்த்தியிடம் கூறிவிட்டு சென்றான். உடனே காரை விட்டு இறங்கி தட்சிணாமூர்த்தி கீழே கிடந்த ரூபாய் நோட்டுகளை எடுக்க முயன்றார். அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மற்றொருவன் காரின் பின்னால் புகை வருகிறது என்று தட்சிணா மூர்த்தியிடம் கூறினான். 
இதையடுத்து தட்சிணா மூர்த்தி பதட்டத்துடன் காரின் பின்னால் சென்று பார்த்தார். அப்போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமி காரில் இருந்த பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு முன்னால் சென்றவனை அழைத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பறந்து விட்டான். 
பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகள் 2 பேரும் தட்சிணாமூர்த்தி வங்கியில் நகை வைத்து பணம் பெறுவதை நோட்டமிட்டு பின் தொடர்ந்து வந்து காரியத்தை கச்சிதமாக முடித்து சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை பறிகொடுத்த தட்சிணாமூர்த்தி இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

ad

ad