புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2012

துணை குடியரசுத் தலைவராக 11ந் தேதி பதவி ஏற்கிறார் ஹமீது அன்சாரி
தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் அமீத் அன்சாரியின் பதவிக் காலம் வருகிற 10-ந்தேதியோடு முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை நடந்தது.


காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக அமீது அன்சாரி மீண்டும் களமிறங்கினார். அவரை எதிர்த்து பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த்சிங் போட்டியிட்டார்.

பாராளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிக்கக்கூடிய இத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள 63-ம் எண் அறையில் செய்யப்பட்டிருந்தன.

காலை 10 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மத்திய மந்திரிகள் சரத்பவார், ப.சிதம்பரம், சுசில்குமார் ஷிண்டே, பவன்குமார் பன்சால் உள்ளிட்ட அனைத்து மத்திய மந்திரிகளும் ஓட்டு போட்டார்கள்.

மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே அன்சாரி முன்னணியில் இருந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் அன்சாரி 490 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அவரைத் எதிர்த்து போட்டியிட்ட ஜஸ்வந்த் சிங் 238 வாக்குள் பெற்று தோல்வியடைந்தா
ர். 8 வாக்குகள் செல்லாதவையாகும்.

இந்த வெற்றியின் மூலம் அன்சாரி 2-வது முறையாக துணை ஜனாதிபதியாகிறார். இதற்கு முன் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் இரண்டு முறை துணை ஜனாதிபதியாக இருந்துள்ளார். 
துணை குடியரசுத் தலைவராக ஹமீது அன்சாரி 2017ஆம் ஆண்டு வரை நீடிப்பார். 1937ல் கொல்கத்தாவில் பிறந்த அன்சாரி 2 முனைவர் பட்டங்கள் பெற்றவர். அ-கார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகவும் பணியாற்றியுள்ளார். தேசிய சிறுபான்மை ஆணையத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். பல நாடுகளில் இந்தியத் தூதராக பணி புரிந்த அனுபவம் பெற்றவர்.

துணை குடியரசுத் தலைவராக 11ந் தேதி பதவி ஏற்கிறார் ஹமீது அன்சாரி. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஹமீது அன்சாரிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.

ad

ad