புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2012


டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் எங்களுக்கும் உடன்பாடு!- ஞானதேசிகன
கடந்த 12ம் திகதி சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் எங்களுக்கும் உடன்பாடு உண்டு என தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார்.
இன்று காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்ட, மறைந்த காங்கிரஸ் தலைவர்கள் சத்தியமூர்த்தியின் 125-வது பிறந்த நாள் மற்றும் ஜி.கே.மூப்பனாரின் 81-வது பிறந்த நாள் விழாக்களில் கலந்துகொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமையில் இருவரது உருவ படங்களுக்கும் மாலை அணிவித்து காங்கிரசார் மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் ஞானதேசிகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் எங்களுக்கும் உடன்பாடு உண்டு.
இலங்கையில் தமிழர்களும் சம உரிமையுடன் வாழ்வது, இராணுவத்தை திரும்பப் பெறுதல் போன்ற நடவடிக்கையை நாங்களும் வலியுறுத்துகிறோம்.
தமிழர்கள் வாழும் பகுதியில் ரயில் பாதைகள் அமைக்கும் பணி மத்திய அரசு உதவியுடன் நடக்கிறது.
தமிழர்கள் மறுவாழ்வுக்காக மத்திய அரசு தேவையான உதவிகளை செய்து வருகிறது. இவ்வாறு கூறினார்.

ad

ad