புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஆக., 2012

கல்லீரல் புற்றுநோய் மற்றும் சிறுநீரகப் பிரச்சினையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் இன்று (14/08/2012) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 67.
ஒரு வார காலத்துக்கும் மேலாக தனியார் மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விலாஸ்ராவின் கல்லீரலில் புற்றுநோய் தாக்கியதில்

உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய நிலையில் இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக், இன்று மதியம் காலமானார்.

மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சரும், மத்திய அமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக்குக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

விலாஸ்ராவ் தேஷ்முக் இரண்டு முறை மகாராஷ்டிர முதலமைச்சராக இருந்துள்ளார். தற்போது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

முன்னதாக சென்னையில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை விலாஸ்ராவுக்கு பொருத்த நேற்று ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், சென்னை பொது மருத்துவமனையில் இருந்து, விலாஸ்ராவ் தேஷ்முக் சிகிச்சை பெற்று வந்த குளோபல் மருத்துவமனைக்கு ஆட்டோ ஓட்டுநரை ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததால், உரிய நேரத்துக்குள் அவரது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை எடுக்க முடியாமல் போனது. இதனால் விலாஸ்ராவுக்கு நடக்க இருந்த அறுவை சிகிச்சை தள்ளிப்போடப்பட்டது.

ad

ad