புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஆக., 2012


19 வயதுக்குட்பட்டவர்ளுக்கான கிரிக்கெட் உலக கோப்பை போட்டி48-வது ஓவரில் கடைசி பந்தில் வெற்றிக்கான 2 ரன்னை அமித்சிங் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்திய அணி அரைஇறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. அரை இறுதிக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி
பெற்றுள்ளன. இன்று நடந்த 3-வது கால் இறுதி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.

டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி திணறியது. முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்தது. பாபர் அசம், உமர்வாசத் ஆகியோர் நிதானமாக ஆடினார்கள். ஆனாலும் இந்த ஜோடி நிலைக்க வில்லை. அதன் பின் பாகிஸ்தான் விக்கெட்டுகள் மளமளவென்று சரிந்தது. 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன் எடுத்தது. 

சந்திப்சர்மா, ரவிகான்ட் சிங் தலா 3 விக்கெட்டு கைப்பற்றினர். 137 ரன் என்ற எளிய இலக்குடன் ஆடிய இந்தியா திணறியது. 8 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிது. 

கேப்டன் சந்த் ரன் எடுக்காமலும், சோப்ரா 4 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன் பின் ஜோடி சேர்ந்த பாபா அப்ராஜித், விஜய் சோல் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. 74 ரன் எடுத்திருந்த போது இந்த ஜோடி பிரிந்தது. விஜய் சோல் 36 ரன்னில் அவுட் ஆனார். 

அதன் பின் நாத் 7 ரன்னிலும், அப்ரஜித் அவுட் ஆனார்கள். ஒரு கட்டத்தில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன் (41 ஓவர்) என்ற நிலையில் இருந்தது. கடைசி விக்கெட்டான அமித்சிங், சந்திப்சர்மா பொறுமையாக ஆடி ஒவ்வொரு ரன்னாக சேர்த்தனர். 48-வது ஓவரில் கடைசி பந்தில் வெற்றிக்கான 2 ரன்னை அமித்சிங் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்திய அணி அரைஇறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

ad

ad