புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2012

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி: இந்திய அணி வெற்றி



ஆஸ்திரேலியா நாட்டின் டவுன்ஸ்வில்லியில் உள்ள டோனி அயர்லாந்து மைதானத்தில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் செய்ய தீர்மானித்தது. இதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது. இந்தியாவிற்கு 226 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 47.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணியில் உன்முக்த் சந்த் அதிக அளவாக 130 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.


ad

ad