புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஆக., 2012


சிறப்பு முகாம்களை மூடுமாறு கோரி 26ஆம் திகதி மறியல் போராட்டம்: நாம் தமிழர் கட்சி
சிங்கள பெளத்த இனவாத அரசின் திட்டமிட்ட இனப் படுகொலையில் இருந்து உயிர் தப்பி தமிழகத்தில் ஏதிலிகளாக அடைக்கலம் புகுந்த நம் ஈழத் தமிழ் சொந்தங்களை சிறப்பு முகாம்களில் அடைத்து வதைத்து வரும் கொடுமைக்கு முடிவு கட்ட மீண்டும் போராட்டக்களத்தில் குதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டிலும், பூந்தமல்லியிலும் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் தமிழக காவல்துறையின் க்யூ பிரிவின் கண்காணிப்பில் இருந்துவரும் சித்தரவதை முகாம்களில் 40க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் சொந்தங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தங்கள் மீதான வழக்குகளில் அவர்கள் பிணைய விடுதலை பெற்றுவிட்ட பின்னரும் இப்படி கால வரையற்று அடைத்து வைப்பது ஏன்? என்று நாம் எழுப்பிய கேள்விகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக பயன்றறுப் போய்விட்டது.
ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு அரசியல் சம உரிமைப் பெற இலங்கை அரசை இந்திய மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று சுதந்திர தின உரையில் கூறிய தமிழக முதல்வர், நம் ஈழத்துச் சொந்தங்கள் அவரது ஆட்சியில் இங்கு தமிழ்நாட்டிலேயே வதைக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்தது.
ஆனால் அதற்கு பலனெதுவும் கிட்டவில்லை. ஈழத் தமிழ் மக்களை கொன்று குவித்தபோது மெளனம் காத்த தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி, சென்னையில் கூட்டிய டெசோ மாநாட்டில் இங்குள்ள சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்குமாறு ஒரு தீர்மானம் போடவில்லை. இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் போராட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
கடந்த மாதம் 11ஆம் திகதி செங்கல்பட்டு முகாமை மறியல் செய்யச் சென்ற நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு விடுதலை செய்கிறோம் என்று உறுதியளித்துவிட்டு மீ்ண்டும் ஏமாற்றியுள்ளது தமிழக காவல்துறையின் க்யூ பிரிவு.
தங்களை விடுவித்து தமிழ்நாட்டின் இதர முகாம்களில் வசிக்கும் சொந்தங்களுடன் வாழ விடுங்கள் என்பதுதான் சிறப்பு முகாம்களில் வாடும் நம் சொந்தங்களின் ஒரே கோரிக்கையாகும். ஆனால், அதற்கு மாவட்ட நிர்வாகங்களும், தமிழக காவல்துறையும் இதுவரை செவிசாய்க்கவில்லை.
இலங்கையில் வன்னியில் இன்னமும் நம் சொந்தங்களை வதைக்கும் முள்வேலி முகாம்களை போல, இங்கே செங்கல்பட்டு, பூந்தமல்லி முகாம்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஏமாற்றத்திற்குள்ளான ஏதலிகளில் ஒருவரான செந்தூரன், கடந்த 6ஆம் திகதி முதல் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய போராட்டத்தை க்யூ பிரிவு பரிகாசம் செய்துள்ளது. இதனால் நொந்துபோன செந்தூரன் இப்போது தண்ணீர் கூட குடிக்காமல் கடும் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கு மேலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது, மீண்டும் களமிறங்கிப் போராடித்தான் ஆக வேண்டும் என்று நிலை ஏற்பட்டுவிட்டது.
எனவே வரும் 26ஆம் திகதி காலை 10 மணிக்கு பூந்தமல்லி முகாம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம். தமிழ்நாட்டு மண்ணிலேயே சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் இயங்கும் வதை முகாம்களை இழுத்து மூடும் வரை போராடத் தயாராவோம் என நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ad

ad