புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2012


இலங்கை ராணுவ அதிகாரிகள் பயிற்சிக்கு கண்டனம்: ரெயில் மறியல் செய்தவர்கள் கைது
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் உள்ள ராணுவ முகாமில் இலங்கையைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் 2 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதா?
என்று தமிழக அரசியல் கட்சிகள் போர்க் கொடி தூக்கியுள்ளன.

வெலிங்டனில் பயிற்சி பெறும் இலங்கை ராணுவ அதிகாரிகளை உடனே திருப்பி அனுப்பவேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மற்றும் போத்தனூரில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 
அதன்படி இன்று காலை 8 மணி அளவில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போத்தனூர் ரெயில் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் ரெயில் நிலையத்துக்குள் புகுந்து அங்கு நின்று கொண்டிருந்த கேரள ரெயில் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
சிலர் ரெயில் என்ஜின் மீது ஏறி நின்றனர். மறியலில் ஈடுபட்டவர்கள் “மத்திய அரசே மத்திய அரசே இலங்கை ராணுவ வீரர்களை உடனே திருப்பி அனுப்பு” என்று கோஷம் எழுப்பினார்கள். அங்கு பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் ரெயில் மறியலில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்தனர். 
இதேபோல் ம.தி.மு.க. தொண்டர்கள் கோவை ரெயில் நிலையம் முன்பு இன்று காலை திரண்டனர். ரெயில் மறியல் போராட்டம் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததால் ரெயில் நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருப்பினும் பாதுகாப்பையும் மீறி ரெயில் நிலயத்துக்குள் ம.தி.மு.க.வினர் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது போலீசாருக்கும், ம.தி.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 
ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்ற 47 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களில் 4 பேர் பெண்கள்.

ad

ad