புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஆக., 2012

 இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி,இன்று இங்கிலாந்து அணி வெற்றிபெற இன்னும் 330 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது-
லண்டனிலுள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்சில் 309 ரன்களுக்கு
ஆட்டமிழந்தது. அந்த அணியின் டுமினி, பிலாண்டர் ஆகியோர் தலா 61 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் பின் 4 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.   

 
பின்னர் தனது முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி 315 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் பேர்ஸ்டோ சிறப்பாக ஆடி 95 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்க தரப்பில் ஸ்டெயின், மோர்னே மோர்க்கெல் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
 
6 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய தென்னாப்பிரிக்க அணி 351 ரன்களில் ஆட்டமிழந்தது. ஆம்லா அதிகபட்சமாக 121 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து வீரர் பின் முதல் இன்னிங்சை போல் இரண்டாவது இன்னிங்சிலும் 4  விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
 
பின்னர் 346 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், தனது இரண்டாவ்து இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. கைவசம் இன்னும் 8 விக்கெட்டுகள் உள்ள நிலையில், கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணி வெற்றிபெற இன்னும் 330 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.
 
ஆனால் தற்போதைய சூழலில் 330 ரன்கள் எடுப்பது கடினம் என்பதால் இங்கிலாந்து அணி டிரா செய்ய முயன்று வருகிறது. எனினும் கடைசி நாளில் 8 விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு இங்கிலாந்து அணி டிரா செய்யுமா என்பது கேள்விக்குறியே. அவ்வாறு டிரா செய்ய இயலாமல் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவினால், அந்த அணி டெஸ்ட் போட்டிகளில் தான் வகிக்கும் முதலிடத்தை ஸ்மித் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியிடம் தாரைவார்க்க வேண்டியிருக்கும் என்பதால் இன்றைய ஆட்டம் பலத்த எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கிறது.  
 
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஏற்கனவே 1-0 என முன்னிலையில் உள்ள தென்னாப்பிரிக்க அணி, இந்த ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad