புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2012

ஒலிம்பிக் டென்னிஸில் 4.5 மணி நேரம் நீடித்த ஆட்டம்: இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த பெடரர்
லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் உலகின் முதற்தர வீரரான ரோஜர் பெடரர் 4.5 மணி நேரம் போராடி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார். லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அர்ஜென்டினாவின் ஜுவான் மார்ட்டினைச் சந்தித்தார்.
முதல் சுற்றில் சற்றுத்தடுமாறிய பெடரர் 3-6, 7-6 (7-5), 19-17 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் ஜுவான் மார்ட்டின் டெல்போட்ரோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
இந்த ஆட்டம் மொத்தம் 4 மணி 26 நிமிடங்கள் நீடித்தது. 3 செட் கொண்ட போட்டியில் அதிக நேரம் நடந்த ஆடவர் ஒற்றையர் ஆட்டம் இது தான்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா, சக நாட்டவரான கிரிலென்கோவையும், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், முதற்தர வீராங்கனையான பெலாரசின் அஸரென்காவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.

ad

ad