புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஆக., 2012

ளைஞர் உலகக்கிண்ணம்: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது அவுஸ்திரேலியா
இளைஞர் உலகக் கிண்ண தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்காவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
19 வயதிற்குட்டோருக்கான உலகக் கிண்ணத் கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் உலக சாம்பியனான அவுஸ்திரேலிய அணி, தென் ஆப்ரிக்கா உடன் மோதிய அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.
டவுன்ஸ்வில்லியில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாட தொடங்கிய தென் ஆப்ரிக்க அணியின் தொடக்க துடுப்பாட்ட வீரர் குயின்டான் காக் 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரரான சாட் பவுஸ் 46 ஓட்டங்களும், பின்பு களமிறங்கிய முரே காட்சி 50 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
50 ஓவர் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்கள் எடுத்தது. பந்து வீச்சில் அவுஸ்திரேலியா அணி சார்பாக மார்க் ஸ்டிக்டி 3 விக்கெட்டுகளும், குரிந்தர் சந்து 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 192 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 48.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடக்க வீரராக களமிறங்கிய காமிரான் பான்கிராப்ட் 66 ஓட்டங்களும், பின்பு களமிறங்கிய குர்டிஸ் பேட்ரிசன் 49 ஓட்டங்களும், வில்லியம் போசிஸ்டோ 40 ஓட்டங்களும், டர்னர் ஆட்டமிழக்காமல் 11 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற மூன்று வீரர்களும் ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
வரும் 23ம் திகதி நடைபெற உள்ள மற்றொரு அரையிறுதி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி, அவுஸ்திரேலியாவுடனான இறுதிப் போட்டியில் வரும் 26ம் திகதி மோதும்.

ad

ad