புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2012


இந்தோனேசியாவில் மூழ்கிய படகு! கடலில் தத்தளித்த 55 பேர் இதுவரை மீட்கப்பட்டனர்-video
இந்தோனேசியக் கடலில் தஞ்சக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று மூழ்கி ஒரு நாள் கடந்துவிட்ட நிலையிலும் அதில் பயணித்தவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் நடந்து வருகின்றன. கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் 55 பேர் வரையில் இதுவரை மீட்கப்பட்டிருக்கிறார்கள்.
ஜாவா தீவுகளுக்கு தென்மேற்குத் திசையாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இந்தோனேசிய ஹெலிகொப்டர்களும் கப்பல்களும் முன்னதாக எவரையும் மீட்காமல் திரும்பியிருந்தன.
ஆனால் பின்னர் இன்று வியாழக்கிமை மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே முதலில் 6 பேரும் பி்ன்னர் ஏனையோரும் மீட்கப்பட்டனர். இவர்கள் இந்தோனேசியாவிலிருந்து 75 கிலோமீற்றர் தொலைவில் தென்மேற்கு பகுதியான யாவா தீவில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியா நோக்கிச் சென்ற இந்தப் படகில் இருந்துள்ள 150 பேரில் அனேகமானோர் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இனிமேல் ஆபத்தான படகுப் பயணங்கள் மூலம் தமது நாட்டுக்குள் வர முயற்சிப்போரை பசிபிக் தீவுகளில் உள்ள தமது முகாம்களுக்கே அனுப்பிவிட நடவடிக்கை எடுத்துள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்திருந்தது.
சட்டரீதியான வழிமுறைகளில் தஞ்சம்கோர முயற்சிப்போர் தாம் தரித்து நிற்கும் நாடுகளிலேயே தங்கியிருந்து அவுஸ்திரேலியாவில் தஞ்சம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலிய அதிகாரிகள் மற்றும் இந்தோனேசிய அதிகாரிகள் தீவிரமாக தேடுதல் பணியில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் தஞ்சக் கோரிக்கையாளர்கள் 300 பேர் வரையில் இந்தோனேசியக் கடற்பரப்பில் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad