புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2012


சுவிஸில், விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் 800 கிலோ மீற்றரைத் தாண்டித் தொடர்கின்றது!
துர்க்கா மாநிலமூடாக சப்கவுசனைச் சென்றடைந்த வைகுந்தனை அந்த மாநில மக்கள் வரவேற்றனர்.
ஈழப்பற்றாளன் வைகுந்தனின் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம். செங்காளன் மாநிலத்திலிருந்து 08.08.2012 அன்று சப்கவுசன் மாநிலத்தை நோக்கிப் புறப்பட்டு சப்கவுசனை சென்றடைந்தது.
அந்த மாநிலத்தில் உள்ள தமிழர் நலன் விரும்பியான பிறேட்டி என்பவர் வைகுந்தனைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்ததுடன், ஊடகங்கள் ஊடாக இந்த முயற்சி தொடர்பான செய்திகள் வெளியிடப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அந்த இடத்திற்கு வந்திருந்த ஊடகவியலாளர் ஒருவரும் செய்தியை வெளியிடுவதற்கான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.
சப்கவுசனில் இருந்து சூரிச்சின் பல பகுதிகளிற்கும் செல்லவுள்ள விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம். 11.08.2012 வரை தொடரவுள்ளது.
12.08.2012 வரை லண்டனில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சிவந்தனின் போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்துத் தொடரும் விடுதலை நோக்கிய பயணம். வைகுந்தனின் தளராத மனதுடன் தொடர்கின்றது.
இரவு வேளை மட்டும் ஓய்வெடுத்து தொடரும் இந்தப் போராட்டம் தமிழினத்தை தன்மானத்துடன் வாழ வைப்பதற்கான முழு முயற்சியாகும்.
ஆகவே! இதற்கு எம்மால் இயன்ற ஒத்துழைப்பைக் கொடுப்பதற்கு முன்வருகின்றோம் என ஆதரவு தெரிவிப்பவர்கள் பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

ad

ad