புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2012

நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம்
 
நிலவில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தவர் என்ற பெருமை கொண்டிருந்த அமெரிக்க விஞ்ஞானி நீல் ஆம்ஸ்ட்ராங் தனது 82-வது வயதில் நேற்று (25) காலமானார்.
கடந்த 5-ம் நாள் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடிய அவர் சில தினங்களுக்கு முன்னர் இருதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
உடல் நல குறைவு காரணமாக தன்னுடைய 82-வது வயதில் நேற்று சனிக்கிழமை மரணமடைந்தாžர்.
வா‌ழ்க்கை வரலாறு:
அமெரிக்‌காவின் ஒகியோ மாகாணத்தில் உள்ள வாபா கோனெட்டா என்ற சிறிய நகரில் பிறந்த ஆம்ஸ்ட்ராங் புருடியூ பல்கலைக்கழக்த்தில் இன்ஜினியரிங் படிப்பை முடித்த பின்னர் தன்னுடைய 30-ம் வயதி்ல் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி விமானியாக பணியில் சேர்ந்தார்.
தொடர்ந்து அவர் படிப்படியாகமுன்னேறி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் நிலவு குறித்த பல்வேறு சோதனைகள‌ை மேற்கொண்டு வந்தது. இதற்காக அப்பல்லோ விண்கலம் தயார் செய்யப்பட்டது.
அப்பல்லோ ஒன்று மற்றும் இரண்டு என தயாரிக்கப்பட்டு இறுதியில் அப்பல்லோ 11 என்ற விண்கலம் மூலம் விண்ணில் பறந்தார்.
அமெரிக்காவின் தற்போதைய மக்கள் தொ‌கையில் ஆறில் ஒருபங்கு மட்டுமே கொண்டிருந்த காலகட்டத்தில் நிலவில் (1967) காலடி பதித்தார்.
நிலவில் இறங்கி நடக்க தொடங்கியதை அடுத்து 20 நிமிடங்களுக்கு பின்னர் தன்னுடைய சக விஞ்ஞானியான புஷ் ஆல்ட்ரின் உடன் இணைந்து கொண்டு நடந்து ‌சென்று நிலவின் ஈர்ப்பு சக்தி மற்றும் பாறை மாதிரிகள் மற்றும் போட்டோக்களை எடுத்து கொண்டார்.
தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் தன்னுடைய விஞ்ஞானியுடன் இவை வேடிக்கையல்ல என்ற தகவலை பரிமாறிக்‌கொண்டார்.
பின்னர் பூமிக்கு திரும்பி ஆம்ஸ்ட்ராங் நாசா விண்வெளி ஆராய்ச்‌சி மையத்தில் ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பப்பிரிவில் ஆலோசகராக பணிபுரிந்தார்.
சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் பாடப் பிரிவில் பேராசிரியராக பணிபுரி்ந்து வந்தார்.

ad

ad