புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2012


முள்ளிவாய்க்கால் சொத்துக்கள் மக்கள் கண்முன்னே அபகரிக்கப்படுகின்றன!
அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க போரின்போது கைவிடப்பட்ட வாகனங்களை பொறுப்பேற்பதற்காக முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்த மக்கள் இன்று சென்றபோது, அங்கே மக்களின் வாகனங்கள் அவர்களின் கண்முன்னே பாரிய உபகரணங்களை உபயோகித்து துண்டு துண்டாக்கப்படுவதை அவதானித்துள்ளனர்.
இவ்வாறு துண்டு துண்டாக  பிரிக்கப்பட்ட பாகங்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வேணி களஞ்சிய பார ஊர்தியில் ஏற்ற்றப்பட்டது கண்டு மக்கள் அரசாங்க அதிபருக்கு அறிவித்தனர்.
அதற்கு அரசாங்க அதிபர் சார்பாக மக்களுக்கு கூறிய விடயம் இது இராணுவத்தினரும் அதற்கு சார்பாக இயங்குவோரும் செய்யும் நடவடிக்கை. இதை நாம் யாரிடம் போய் முறையிடுவதென்று சொல்லி மக்களை எமாற்றத்தோடு அனுப்பி வைத்தனர்.
எல்லாவற்றையும் இழந்து நிற்கும் வன்னி மக்களுக்கு இருக்கும் பெரிய வேதனை இந்த சொத்து அபகரிப்பு நடவடிக்கைக்கு தமிழரும் உடந்தையாக இருப்பதுதான். எனக் கூறி தமது விசனத்தை வெளிப்படுத்தினர் சொத்துக்களை இழந்துள்ள மக்கள்.

ad

ad