புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2012


அரசாங்கத்திற்கு அளிக்கும் வாக்கு அராஜக நடவடிக்கைக்கு அங்கீகாரம் வழங்குவதாக அமையும்: சோ. யோகானந்தராஜா
தமிழ் மக்கள் த.தே.கூட்டமைப்புக்கு அளிக்கும் வாக்கு, எமக்குரிய தீர்வை உடன் வழங்க வேண்டும் என்ற செய்தியை அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் எடுத்துக் காட்டுவதாக அமையும். மாறாக இந்த அரசாங்கத்திற்கு அளிக்கும் வாக்கு, அரசாங்கத்தின் அராஜக நடவடிக்கைக்கு அங்கீகாரம் வழங்குவதாக அமையும் வேட்பாளர் சோ. யோகானந்தராஜா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது இல்லத்தில் கடந்த வியாழக்கிழமை கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
தமிழ் மக்களுக்கு பல்வேறு பட்ட அநீதிகள் இழைக்கப்பட்டு வந்த நிலையில், தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளைப் பெற தமிழ்த் தலைமைகள் அகிம்சை வழியிலான போராட்டத்தை முன்னெடுத்த போதும், சிங்கள பேரினவாதம் நியாயமான தீர்வினை வழங்க முன்வராத நிலையில் உரிமைக்காக எமது இளைஞர்கள் ஆயுதமேந்தி போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆயுதப் போராட்டம் இன்று மௌனித்த நிலையில், வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் பல்வேறு வேலைத் திட்டங்களை இந்த அரசு அராஜகமாக மேற்கொண்டு வருகின்றது.
திட்டமிட்ட குடியேற்றம், நில ஆக்கிரமிப்பு, புத்த சிலைகளை நிறுவி பௌத்த மயமாக்கும் நடவடிக்கை, கலாசார சீரழிவு என அரசின் அராஜக நடவடிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.
இந் நிலையிலேயே கிழக்கு மாகாண சபைத் தேர்தல் எமக்கு வலிந்து திணிக்கப்பட்டுள்ளது. இத் தேர்தல் ஊடாக அரசின் அராஜக நடவடிக்கை உடன் நிறுத்தப்பட வேண்டும்.தமிழ் மக்களுக்குரிய தீர்வை உடன் வழங்க வேண்டும் எனும் செய்தியை இந்த அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தமிழ் மக்கள் தெரிவிக்க வேண்டும்.
இத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்திற்கு தமிழ் மக்கள் அழிக்கும் ஒவ்வொரு வாக்கும் இந்த அரசாங்கம் நாளுக்கு நாள் மேற்கொண்டுவரும் அராஜகப் நடவடிக்கைக்கு அங்கீகாரம் வழங்குவதாக அமையும்.
ஆயுதப் போராட்டம் மௌனித்துள்ளதே தவிர தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான எமது இராஜதந்திரப் போராட்டம் கைவிடப்படவில்லை. இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகள் விடயத்தில் சர்வதேச சமூகம் கவலை கொண்டுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதிலும் சர்வதேச சமூகம் கவனமாக உள்ளது.
அதன் ஒருகட்ட நடவடிக்கையே ஜெனிவாத் தீர்மானம். ஜெனிவாவில் நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பாக எதிர்வரும் நவம்பரிலும், 2012 மார்ச்சிலும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பாக மீளாய்வு செய்யவிருக்கின்றது. இந் நிலையில் கிழக்கு மாகாண சபையின் தேர்தலை ஒரு வருடத்தின் முன் கலைத்து நடாத்தத் திட்டமிட்டுள்ளது.
இத் தேர்தலினுடாக தமிழ் மக்களின் அதிக வாக்குகளைப் பெற்று சர்வதேசத்திற்கு தமிழ் மக்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை தமிழ் மக்கள் எங்களுடனேயே உள்ளனர் எனக் அரசாங்கம் காட்டும் எண்ணத்துடனேயே இத் தேர்தல் திட்டமிட்டுள்ளது.
இத் தேர்தலில் தமிழ் மக்கள் வெற்றிலைச் சின்னத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஜெனிவாத் தீர்மானத்தை வலுவிளக்கச் செய்வதாக அமைந்து விடும் அந்த நிலைக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் துணைபோகக் கூடாது.
வீட்டுச் சின்னத்திற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களித்து ஜெனிவாத் தீர்மானத்திற்கு வலுச் சேர்ப்பதுடன் இந்த அரசின் அராஜகப் போக்கையும் தடுக்க வேண்டும் என்ற செய்தியையும் இந்த அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தமிழ் மக்கள் கூற வேண்டும் அதற்கு அரசினால் எமக்கு வலிந்து திணிக்கப்பட்ட ஒரு தேர்தலாக தமிழ் மக்கள் இத் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும்.
தமிழ் மக்கள் நோகடிக்கப்பட்டவர்கள். அதன் வலி தெரிந்தவர்கள். நோகடித்தவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்றும் தெரிந்தவர்கள். அதனை நிச்சயம் செய்வார்கள். அதனைத் தகுந்த நேரத்தில் செய்ய வேண்டும். அந்த நேரம்தான் கிழக்கு மக்களுக்கு கிடைத்த நேரம்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் இத் தேர்தலினுடாக இந்த அரசாங்கத்திற்கும் பேரினவாத சத்திகளுக்கும் தமிழ் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.

ad

ad