புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2012


தமிழர் தாயகப் பெண்களின் நிலை: பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகளின் கவனத்திற்கு 
இலங்கையின் இன்றைய சூழலில் தமிழர் தாயகப் பெண்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் மற்றும் சவால்கள் குறித்து பிரித்தானியாவின் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் செயற்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் முதியோர் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
கடந்த சில மாதங்களாக தொடர்சியான சந்திப்புக்கள் வழியே மேற்கொள்ளப்பட்டு வரும் இச்செயற்திட்டம் குறித்து அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
அனைத்துலக நெருக்கடிகள் குழுவின் அறிக்கை சம்பந்தமாகவும், 90,000க்கும் மேலான கணவனை இழந்த பெண்களிற்கான வாழ்வாதார நிலைகளையும், கட்டாய பாலியல் துன்புறுத்தல் விடயமாகவும், பாதுகாப்புப் பொறிமுறை சம்பந்தமாகவும், இறுதிக்கட்டப் போரின்போது நடந்த இனப்படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை நடாத்த வேண்டும் என்றும்,
எமது தாயக மக்கள் பாதுகாப்புடனும், சுதந்திரமாகவும் வாழ்வதற் கான வாழ்வுரிமையை வலியுறுத்தியும், அ
வர்களின் அரசியல் விருப்பத்தை அறிவதற்கான பொதுசன வாக்கெடுப்பொன்றை நடாத்த வேண்டும் என்றும், இச் சந்திப்புக்கள் வழியே முன்னிறுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ள இப்பிரதிநிதிகளை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு இச்சந்திப்புகள் தனிப்பட்ட முறையிலும் பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாகவும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad