புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2012


தமிழ்நாடு எதிர்த்தாலும் இலங்கை படையினருக்கு பயிற்சிகளை இந்தியா வழங்கும்! பள்ளம் ராஜூ
தமிழக கட்சிகள் தொடர்ந்தும் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்ற பொழுதிலும், இலங்கை பாதுகாப்பு படைத்தரப்பினருக்கான பயிற்சிகளை இந்தியா வழங்கும் என இந்திய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் எம்.எம். பள்ளம் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழக வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கான சேவைக் கல்லூரியில், இரு இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் நிறுத்தப்பட்டு, அவர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தக் கருத்தை இந்தியா வெளியிட்டுள்ளது.
இலங்கை இந்தியாவின் நட்பு நாடாக திகழ்வதால், தொடர்ந்தும் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுக்கான பயிற்சிகள், இந்தியாவினால் வழங்கப்படும் என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கடந்த ஜூலை மாதமும் தமிழக கட்சிகளினால் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பினை அடுத்து, தமிழக, தாம்பரம் பாதுகாப்புப் படைத்தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த 11 இலங்கை பாதுகாப்பு படைத்தரப்பினைச் சேர்ந்தவர்கள் பெங்களுர் பயிற்சி முகாமிற்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ad

ad