புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஆக., 2012


நடுக்கடலில் பிழைத்து போன ஒஸ்ரேலியா வியாபாரம்

ஓஸ்ரேலியாவில் அகதி தஞ்சம் கோரும் நோக்கத்தில் அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிரு
ந்த நிலையில் அப்படகிலிருந்த பாதிக்கப்பட்டஅகதிகளை சிறிலங்கா கடற்படையினர் மீட்டுள்ளனர்.
நீர்கொழும்பிலிருந்து இந்த படகு ஒஸ்ரேலியா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளது. சர்வதேச கடற்பரப்பில் வைத்து இந்த படகின் இயந்திரம் தொழில்நுட்ப கோளாறினல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் சுமார் 38 பேர் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் இந்தப் பயணம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் இதனால் உணவு குடிநீர் வசதியின்றி படகுப் பயணிகள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மீட்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
படகு நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த போது அங்கு வந்த மற்றொரு சிறிய படகு எட்டு பேரை ஏற்றிச்சென்றதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. வேறு படகு ஒன்றில் ஏறிச் சென்றுள்ளனர்.
நீர்கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவரே இந்த பயண ஏற்பாட்டை செய்துள்ளார். காப்பாற்றப்பட்ட படகில் 19 தமிழர்களும், 11 சிங்களவர்களும் இருந்ததாகவும், இவர்கள் ஒஸ்ரேலியாவில் குடியேறி தமது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்குடன் இப்பயணத்தை மேற்கொண்டனரே தவிர இலங்கையில் இவர்களுக்கு அச்சுறுத்தல் காரணமாக செல்லவில்லை என சிறிலங்கா கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ad

ad