புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2012

இலங்கையுடன் வர்த்தகமா?- சென்னையில் முற்றுகை போராட்டம்
தமிழர்களை இனப் படுகொலை செய்த இலங்கையுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய இந்திய அரசின் சார்பில் வணிக குழு ஒன்று இலங்கைக்கு சென்றுள்ளது.
குறிப்பாக டி.வி.எஸ் நிறுவனம் , அசோக் லேலாந்து, ஏர் டெல் போன்ற நிறுவனங்கள் இலங்கை சென்றுள்ளன. இதை கண்டிக்கும் வகையில் தமிழர் அமைப்புகள் பல சென்னை அண்ணா சாலையில் உள்ள டி.வி.எஸ் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தியது.
இந்நிகழ்வில் பல அமைப்புகளும் சேர்ந்து டி.வி.எஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு தலைமை அதிகாரியை சந்தித்து, தங்கள் எதிர்ப்பு மற்றும் கண்டனத்தை அறிக்கையாக சமர்ப்பித்தனர்.
நிறுவன தலைமைக்கு இந்த கண்டன செய்தியை அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர். டி. வி. எஸ் நிறுவனம் இலங்கை உடனான வர்த்தக உறவை உடனே முறித்துக் கொள்ளவேண்டும் என பதாதை ஏந்தி முழக்கமிட்டனர்.
உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஏற்பாடு செய்த இந்த முற்றுகை போராட்டத்தில், இயக்குனர் புகழேந்தி, த. மு. க தோழர் அதியமான், தமிழர் பண்பாட்டு நடுவம் ராஜ்குமார் பழனிசாமி, சேவ் தமிழ்ஸ் இயக்கம் பரிமிளா, உலக தமிழர் பாதுகாப்பு இயக்கம் சூரியா, ராஜா ஸ்டாலின் மற்றும் பல அமைப்பு சாரா தோழர்களும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
Content of Popup

ad

ad