புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2012

இலங்கையுடன் “சீபா” வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ள இந்தியா தீர்மானம்
இந்திய மற்றும் இலங்கை இடையே ஏற்படுத்திக்கொள்ள உத்தேசித்துள்ள சீபா எனப்படும் முழுமையான வர்த்தக ஒத்துழைப்பு உடன்படிக்கை தொடர்பான கலந்துரையாடலை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ஆனந்த் சர்மா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்து நேற்று கலந்துரையாடிய போதே அவர் இந்த திட்டத்தை வெளியிட்டிருந்தார்.
இருநாட்டினதும் வர்த்தக செயலாளர்கள் இதன் ஆரம்ப சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர். விவாதங்களின் ஊடாக சீபா தொடர்பில் நிலவும் கருத்து முரண்பாடுகளை களைய முடியும்
எனவும் இந்திய அமைச்சர் தெரிவித்தார்.
சீபாவின் ஊடாக இலங்கைக்கு, இந்தியாவின் வர்த்தக சந்தையினுள் நுழையும் வாய்ப்பு பெருமளவில் கிடைக்கும் எனவும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ஆனந்த் சர்மா குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கையில் நடைபெறும் வர்த்தகக் கண்காட்சியில், இந்தியாவைச் சேர்ந்த 108 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. கொழும்பில், அன்னிய நிறுவனங்களின் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் வர்த்தகக் கண்காட்சி ஆரம்பமானது.
மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்த மூன்று நாள் கண்காட்சியில் கலை நிகழ்ச்சிகளும், உணவுத் திருவிழா, கருத்தரங்கம் உள்ளிட்டவைகளும் நடைபெறுகின்றன.
இந்தநிலையில், திருகோணமலையில், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றினை நிர்மாணிப்பதற்கு விசேட பொருளாதார வலயம் ஒன்றை உருவாக்குவதற்கு இந்தியா ஆதரவளிக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்திய வாகன உற்பத்திகளுக்கு இதனூடாக உதிரிப்பாகங்களை வழங்க முடியும் எனவும் அது தொடர்பில் 90 நாள் அறிக்கையொன்றை தயாரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ad

ad