புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஆக., 2012


வசூல் ராணியான யாழ். மாநகர முதல்வர்?
உற்சவ காலத்தையொட்டி யாழ். மாநகர சபையால் வர்த்தக நிலையங்கள் அமைக்கவும் மற்றும் துவிச்சக்கர வண்டி மோட்டார் வண்டி மற்றும் கார் போன்வறவற்றிற்கான பாதுகாப்பு நிலையங்கள் போன்றவற்றை கொடுப்பதில் விலைக் கோரல் ஊடாக பல இலட்சங்களை பார்த்த யாழ். மாநகர முதல்வர் தற்போது யாழில் பிரபல வர்த்தகர்களை தொடர்பு கொண்டு பணம் கேட்டுவருவதாக வர்த்தகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தனின் வருடாந்த உற்சவம் கடந்த மாதம் 24 ம் திகதி ஆரம்பமாகி இன்று 16 ஆம் திருவிழா நடைபெறுகின்றது.
முதல்வரின் மகன் இந்தியாவில் மருத்துவதுறையில் கற்கவுள்ளதாகவும் அதற்கு இரண்டு கோடி இலங்கை ரூபா தேவைப்படுவதாகவும் சொல்லியே ஒரு சில வர்த்தகர்களை இரகசியமாக தொடர்பு கொண்டு பண உதவி செய்யும்படி கோருவதாக தெரியவருகின்றது.
அதற்கு கைமாறாக குறித்த வர்த்தகர்களுக்கு யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட இடத்தில் உள்ள மரக்கறி சந்தைக்கும் நியு மார்கெட்டுக்கும் இடையில் உள்ள இடைவெளியில் இரண்டு வர்த்தக நிலையங்களைளை கட்டிக் கொடுத்துள்ளார்.
குறித்த இடம் முன்னர் துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு நிலையமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் முருகனின் கோயிலைச் சுற்றி திருவிழாக் காலங்களில் கொடுக்கப்படும் வர்த்தக நிலையங்கள் கொடுப்பதில் பல்வேறு முறைக்கேடுகள் நடந்ததை ஈபிடியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் விஜயகாந் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டமையும் நினைவு கூறத்தக்கது.
சாரதரண கச்சான் வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடம் கூட இருபத்தையாயிரம் தொடக்கம் ஐம்பதாயிரம் ரூபாவரை வசூலிக்கப்ட்டுள்ளது. வசூல் ராணியின் வசூல் நடவடிக்கைக்கு யாழ். மாநகரசபையின் அதிகாரிகள் சிலரும் பக்கத் துணையாக செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

ad

ad