புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஆக., 2012

டெசோ தீர்மானங்களால் இலங்கைக்கு பேராபத்து; அரசை எச்சரிக்கிறது தேசப்பற்று இயக்கம்
 சென்னையில் தி.மு.க வின் தலைமையில் நடை பெற்ற "டெசோ' அமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அரசு கூடிய கவனம் செலுத்தி நாட்டுக்கு ஆபத்து வராத வகையில் நடவடிக்கைகளைப் பலப்படுத்த வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

 
"டெசோ' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுள் தமிழர் விரும்பும் தீர்வை அவர்களே நிர்ணயித்துக் கொள்வதை வலியுறுத்தி இந்தியா ஐ.நாவில் பிரேரணையொன்றைக் கொண்டுவர வேண்டு மென்ற தீர்மானம் பாரதூரமானதாகும் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
"டெசோ' அமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
"டெசோ' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளையாட்டுத்தனமாக எடுத்துவிட முடியாது. இந்திய மத்திய அரசின் பங்காளிக்கட்சி யாக தி.மு.க. திகழ்வதால் அரசு இந்த விடயத்தை சிறியதொரு விவகாரமாகக் கருதிவிடக்கூடாது.
 
எனவே, "டெசோ' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி நாட்டுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் அரசு செயற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும்.
 
தனி ஈழத்தை உருவாக்கும் வகையிலான தீர்மானம் ஒன்றும் "டெசோ'வில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது, தமிழர்கள் தங்களுக்குத் தேவையான வகையில்   அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்தியா ஐ.நாவில் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர வேண்டும் எனக் கூறப்படுவது கிட்டத்தட்ட ஈழத்தை உருவாக்கும் முயற்சியாகவே அதைப் பார்க்கவேண்டும்.
 
இதேவேளை, எமது நாட்டில் இறையாண்மை, சுயாதீனம் ஆகியவற்றில் தலையிடும் அதிகாரம் இந்தியாவிற்கு கிடையாது என்ற விடயத்தை இங்கு தெளிவாகக் கூறிவைக்க விரும்புகின்றோம். அதனையும் மீறி இந்தியா நடவடிக்கை எடுக்கக்கூடாது. 
 
காஷ்மீர் பிரச்சினை விடயத்தில் இலங்கை தலையிடுவதில்லை. இந்தியா அதற்கு அனுமதிப்பதுமில்லை. எனவே, எமது நாட்டு விவகாரங்களில் குறிப்பாக இந்தியா தலையிடக்கூடாது என்றார். 
 

ad

ad