புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஆக., 2012


வெள்ளவத்தையில் தமிழ் குடும்பமொன்றைச் சேர்ந்த மூன்று பேர் சடலங்களாக மீட்பு
கொழும்பு, வெள்ளவத்தை – ராமகிருஷ்ணனன் வீதியில் டெரெஸ் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன..
கொழும்பு வெள்ளவத்தையில் சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
ஹட்டன் கொட்டக்கலை டெரிக்கிளயர் தோட்டத்தை சேர்ந்த குமாரசாமி என்ற 60 வயதுடைய குடும்பஸ்தர் அவரது 56 வயதுடைய மனைவி பூபதி மற்றும் 23 வயதான மகள் அமிர்தப்பிரியா ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இச்சம்பவத்தில் மரணமானவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் றோஹன தெரிவித்துள்ளார்.
அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா?  என்ற ரீதியில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஹட்டன் - கொட்டகலை பகுதியைச் சேர்ந்த அவர்கள் மூவரையும், குடும்பத்தின் மூத்த மகன் சில தினங்களுக்கு முன்னர் கொழும்புக்கு அழத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்தததையடுத்து அயலவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்ததன் பின்னரே பொலிஸார் இச்சடலங்களை மீட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு நீதிமன்ற நீதிவான் விஜயம் செய்து பார்வையிட்டுள்ளதுடன், விசாரணை அதிகாரிகளும் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
எனினும், அவர்களை அழைத்து வந்த மூத்த மகனின் தகவல்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் வெள்ளவத்தை பொலிஸாரும், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரும் அடங்கிய இரண்டு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

ad

ad