புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2012


இலங்கை இராணுவ அதிகாரிகளை திருப்பி அனுப்புமாறு மத்திய அரசிடம் ஞானதேசிகன் வேண்டுகோள்
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவ  முகாமில்  பயிற்சி பெறும் இலங்கை இராணுவ அதிகாரிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறி்த்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நட்பு நாடு என்பதால் இலங்கை இராணுவத்தினருக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பல்லம் ராஜூ கூறியதாக செய்திகள் வந்துள்ளன.
இது குறித்து அவரிடம் தொலைபேசியில் பேசினேன். நட்பு நாடுகளின் இராணுவத்துக்கு ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்தியாவில் பயிற்சி அளிப்பது வழக்கமானது. சில நேரங்களில் மாநில அரசுகள் தெரிவிக்கும் கருத்துக்களையும கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னதாகக் கூறினார்.
பத்திரிகைகளில் வெளிவந்துள்ள கருத்து:
சர்வதேச மற்றும் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்போடு செய்து கொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்தியாவில் மற்ற நாடுகளுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கலை, கலாச்சாரம், கல்வி சம்மந்தப்பட்ட பரிவர்த்தனைகளும் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் நடைபெறுகிறது. தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்போடு (சார்க்) செய்து கொண்ட ஒப்பந்த அடிப்படையில் தான் இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதேவேளை, முன்பு இலங்கை இராணுவ அதிகாரிகள் 9 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டபோது, தமிழக காங்கிரஸ் சார்பில் இராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோனியிடம் முறையிட்டோம். அதனால் அவர்கள் வேறு மாநிலத்துக்கு அனுப்பப்பட்டார்கள்.
நீலகிரியில் பயிற்சி பெறும் இலங்கை இராணுவத்தினரை திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய இணை அமைச்சர் பல்லம் ராஜூ நிராகரித்ததாக பொருள் கொள்ளக் கூடாது.
இலங்கை இராணுவ அதிகாரிகளை உடனடியாக திருப்பி அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக இராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோனியிடம் பேச இருப்பதாக ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

ad

ad