புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஆக., 2012


சப்ரகமுவையில் நாம் முதலமைச்சர் பதவி கேட்கவில்லை! புரிந்துகொண்டு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்!- மனோ கணேசன்
சப்ரகமுவ மாகாணசபையின் முதலமைச்சர் பதவியை இன்று நாம் கோரவில்லை. எமது தேவையெல்லாம், இந்த மாவட்டங்களில் சிறுபான்மையாக வாழும் எமக்கு உரிய, எமது இனத்தின் பிரதிநித்துவம்தானே தவிர வேறு எதுவும் இல்லை. என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இந்த நாட்டில் நாம் ஜனாதிபதியாக முடியாது. பிரதமர் பதவியும் கோர முடியாது. அதுபோல், இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் போட்டியிட்டு சப்ரகமுவ மாகாணசபையின் முதலமைச்சர் பதவியை இன்று நாம் கோரவில்லை.
எமது தேவையெல்லாம், இந்த மாவட்டங்களில் சிறுபான்மையாக வாழும் எமக்கு உரிய, எமது இனத்தின் பிரதிநித்துவம் தானே தவிர வேறு எதுவும் இல்லை. இந்த உண்மையை உணர்ந்து இரத்தினபுரி, கேகாலை மாவட்ட தமிழர்கள் எமது பொதுசின்னமான சேவல் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இறக்குவானை ரஷ்மி விடுதியில் மலையக தமிழ் கூட்டமைப்பின் பிரச்சார கூட்டம் நேற்று நடைபெற்றது. மலையக மக்கள் முன்னணி தலைவி சாந்தினி சந்திரசேகரன், அரசியல்துறை தலைவர் ராதாகிருஷ்ணன் எம்பி, இதொகா உப தலைவர் ராம், ஜதொகா பொதுச்செயலாளர் முரளி ரகுநாதன், வேட்பாளர்கள் ரூபன் பெருமாள், எம்.சந்திரகுமார், எஸ்.மாசிலாமணி, எம்.சிவா ஆகியோர் உட்பட பெருந்தொகையானோர் கலந்துகொண்ட கூட்டத்தில் மேலும் உரையாற்றிய மனோ கணேசன் கூறியதாவது,
நீங்களும், நானும் தமிழர்கள். எனது இனம் வாழ வேண்டும். எனது இனத்துக்கு துன்பம் கொழும்பில், மலையகத்தில், வடக்கில், கிழக்கில் எங்கு ஏற்பட்டாலும், நான் அங்கு நிற்பேன். அதனால்தான் நான்கு நாளைக்கு முன் யாழ்ப்பாணத்திலும், இன்று இங்கேயும் நிற்கிறேன்.
அதுபோல் எனது இனத்துக்கு நம்மை பயக்கும் என நான் நம்பும் எதையும் எந்தவித தயக்கமும் இல்லாமல் நான் செய்வேன். அதனால்தான் நாம் தைரியமாக, துணிச்சலுடன் முடிவெடுத்து இதொகா, மலையக மக்கள் முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளுடன் கைகோர்த்து பொது பட்டியலை சமர்ப்பித்து போட்டியிடுகிறோம்.
தமிழ் இனத்துக்கு பணியாற்றுவதற்கு, நமது கட்சி எவரிடம் அனுமதி கோரி நிற்காது. ரணில் மனம் வருந்துவார், ராஜபக்ச கோபிப்பார் என்று நான் தயங்கி நிற்பது கிடையாது.
ஏனென்றால் எமது இனம் துன்புறும்போது அது எனக்கும், உங்களுக்கும்தான் வலிக்கிறது. யாழ்ப்பாணத்தில் டில்றோக்சனும், நிமலரூபனும் சாகும்போதும், இங்கே இரத்தினபுரியிலும், கேகாலையிலும் தமிழ் இனத்து தோட்ட தொழிலாளர்கள் தாக்கப்படும் போதும், எனது இதயம்தான் துடிக்கிறது.
இந்த கொடுமைகளுக்கு முடிவு காண என்னால் இயன்ற அனைத்தையும் எப்போதும் நான் செய்கிறேன். இன்று இந்த தேர்தலில் இதனால்தான் நாம் இந்த முடிவை எடுத்து, தமிழ் வாக்குகளை சிதறிடிக்காமல் போட்டியிடுகிறோம்.
இதன் மூலம்தான் எமது தமிழ் பிரதிநிதித்துவத்தை இரத்தினபுரியிலும், கேகாலையிலும் உறுதிப்படுத்த முடியும் என்பது மூளை உள்ள எவருக்கும் விளங்கும்.
நாங்கள் என்ன, இந்நாட்டின் ஜனாதிபதி பதவியையா, பிரதமர் பதவியையா கேட்கிறோம்?அல்லது சப்ரகமுவ மாகாணத்தின் முதலமைச்சர் பதவியா கேட்கிறோம்? சட்டத்தில் இந்த பதவிகள் கோர எமக்கு தடை இல்லை.
ஆனால் நடைமுறையில் இது நடக்க முடியாது என்பதை நாம் அறிவோம். இந்நாட்டில் சிங்கள மக்களால் நேசிக்கப்பட்ட லக்ஸ்மன் கதிர்காமருக்குகூட பிரதமர் பதவி, அவர் கேட்டும் கிடைக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு போகும்போது, பாராளுமன்றத்தில் ஜோன் அமரதுங்க எம்பியை பதில் எதிர்க்கட்சி தலைவராக நியமித்தார்.
அதற்கு ஐதேகவிலேயே எதிர்ப்பு கிளம்பியது. ஏனென்றால் ஜோன் அமரதுங்க ஒரு சிங்களவராக இருந்தாலும், அவர்ஒரு கிறிஸ்தவராம். ஒரு சிங்கள பெளத்தருக்கு மாத்திரமே இந்த உரிமைகளாம்.
இதுஎன்ன நியாயம்?கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். எமக்கு உரிய ஜனநாயக பிரதிநிதித்துவங்களை பெறுவதற்கு நாம் கூட்டு முயற்சி எடுத்தால் அது தவறாம். அது பெரும்பான்மை கட்சிகளுக்கு பிடிக்காதாம். நாங்கள் எமது மக்களுக்கான உரிமைகளை தட்டிக்கேட்டால் அது இனவாதமாம். அதுவும் இவர்களுக்கு பிடிக்காதாம். இவர்களுக்கு பிடித்ததை மாத்திரம் செய்வதற்கும், பிடிக்காததை செய்யாமல் இருப்பதற்கும், மனோ கணேசன் பெரும்பான்மை கட்சிகளின் எடுபிடி அல்ல. என்னை திட்டுவதற்கு என்றே ஒரு கூட்டம் இருக்கிறது.
இவர்கள் மக்களுக்கு தவறான வழிகாட்டுகிறார்கள். இவர்களுக்கு இன்று என்னை திட்டி தீர்ப்பதை தவிர வேறு வேலை கிடையாது. நான் கொள்கை நிலைப்பாடுகளை பற்றி பேசினால் இவர்கள், என்னைபற்றி பேசுகிறார்கள்.
நான் சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாத ஒரு பனங்காட்டு நரி. இரத்தினபுரி, கேகாலை தமிழர்கள் எம்மை கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதை இந்த தேர்தல் மூலம் நாம் 

ad

ad