புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஆக., 2012

கைதிகள் மரணம் தொடர்பில் மன்னிப்புக் கோர வேண்டிய தேவையில்லை ; டக்ளஸ் தெரிவிப்பு
நெருப்பு சுடும் எண்டு கைய விட்டுப் பார்த்தா தெரியவேணும் நெருப்புக்குள் கையை வைத்து தான் சுட்டுக் கொள்ளப் போகிறீர்கள் என்றால் அதை எப்படி நியாயம் என்று சொல்ல முடியும். அது பிழை தான் அதற்காக யாரும் மன்னிப்பு கேட்க முடியாது. அத்துடன் மன்னிப்பை ஏன்
கோர வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக தெரிவித்தார்.

வவுனியா சிறையில் நடைபெற்ற கலவரத்தையடுத்து சிறைச்சாலை அதிகாரிகளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளான நிமலரூபன் மற்றும் டெல்றொக்சன் ஆகியோர் தொடர்பில் ஊடகவியலாளர்களினால் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நானும் ஒரு முன்னாள் அரசியல் கைதி தான். நானும் MP தான். நான் இங்கு MP என்று கூறுவது MP பதவியை அல்ல Member of Prison  எனக்கும் அந்த அனுபவங்கள் நன்றாகத் தெரியும்.

வவுனியாவில் இருந்தவர்கள் சிறைச்சாலை அதிகாரிகள் 3 போரைப் பிடித்து அடைத்து வைத்திருந்தார்கள். அது பிழையான விடயம் அதனால் தான் இவ்வாறு நடந்தது. இவர்கள் தாக்கப்பட்ட இச்சம்பவத்தில் நாங்கள் எதனை எதிர்பார்க்க முடியும்.

குறித்த கைதிகளை சிறை அதிகாரிகள் வலோக்காரமான முறையில் தாக்கப்பட்டிருந்தால் அதனைப் பற்றிப் பேசுவதில் ஒரு யதார்த்தம் இருக்கும்.ஆனால் இவ்விடயம் அவ்வாறு அமையவில்லை.இதற்கு எவ்வாறு மன்னிப்புக் கோருவது. மன்னிப்புக் கோர வேண்டிய தேவையில்லை. நெருப்பு என்று தெரிந்தும் கையை வைத்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்.

ஜனநாயக பூர்வமான ஆர்ப்பாட்டங்கள் , உண்ணா விரதங்களைச் செய்ய வேண்டும். அதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இவர்கள் வன்முறை சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தவறைச் செய்து விட்டு உண்ணாவிரதம் இருந்தனர். அது தவறான விடயம். இது தொடர்பில் எனக்கு கதைக்க உரிமை இருக்கு. நான் ஒருமுன்னாள் போராளி.

பலாங்கொடை இராணுவ முகாமில் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருடன் நான் இருந்த காலத்தில் அவர்கள் இறந்து போய்விட்டார்கள் நாம் அரசியல் கைதிகள் எங்களை அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தினோம்.

குட்டிமணியும் தங்கத்துரையும் விரும்பவில்லை. ஏனெினில் அவர்களின் குடும்பத்தினரை பார்வையிட ஆமி அனுமதி வழங்கியிருந்தது. அதனால் எமது உண்ணா விரதப் போராட்டத்திற்கு அவர்கள் பங்கு கொள்ளவில்லை. எனினும் நான் 7 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தேன். எங்களுக்குரிய அந்தஸ்தும் வழங்கப்பட்டது.

அவ்வாறு தான் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து தற்போது அரசியல் கைதிகளின் படுகொலை தொடர்பில் கதைக்கும் சுரேஸ்பிரேமச்சந்திரன் மனோ கணேசன் என எல்லோரும் என்ன செய்தார்கள் என்று எனக்குத் தெரியும்.

சுரேஸ்பிரேமச் சந்திரன் நெருப்பு தினம் கொண்டாடிட்டு ஓடிவிட்டார்.குட்டையைக் கிழப்பி விடுறது  தான் இவர்களின் நோக்கம் தீர்வு காண்பது அல்ல. தீர்வு என்பது இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைபெற்றிருந்தால் நடைபெற்றிருக்கும். ஆனால் தீர்வு என்று கூறி சில அரசியல் வாதிகள் சுயலாபம் கருதிச் செயற்பட்டு வருகின்றனர். பெற முடியாத ஒன்றிற்காக கதைத்துக் கொண்டு இருக்கிறார்கள் இதற்கு பத்திரிகைகள் துணை போகின்றன.

அத்துடன் பத்திரிகைகள் சவப்பெட்டிக் கடைக்காரர்கள் போலவே செயற்பட்டு வருகின்றன.

அரசியல் வாதிகள் தமது குடும்பங்களை வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கையினை அனுபவிக்க விட்டுவிட்டு தாங்கள் இங்கு வந்து போகிறார்கள். இவர்கள் கோயிற் திருவிழாவிற்கு மூட்டை முடிச்சுகளுடன் கலர் கலராக வந்து திருவிழா முடிய போகும் வியாபாரிகள் போலத்தான் இவர்களும் செய்கின்றார்கள்.

இருப்பினும் கைதிகளும் தமது நிலைமைகளை உணர்ந்து செயற்பட வேண்டும். நான் சொல்வதை மூத்த அனுபவ சாலி சொல்வதாக எடுத்துக்கொள்ளுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்த கைதிகளை உணவினை உண்ணுமாறு துன்புறுத்தியதில் ஏற்பட்ட அசம்பாவிதத்தினையடுத்து கைதிகள் சிறை அதிகாரிகள் மூவரை பிடித்து பணயம் வைத்திருந்தனர். அதனையடுத்து அங்கு விசேட அதிரடிப்டையினர் வரவழைக்கப்பட்டு குறித்த மூவரும் மீட்கப்பட்டனர்.

இதனையடுத்து நடைபெற்ற அசம்பாவிதத்தில் தாக்குதலுக்கு இலக்காகி ராகமை வைத்தியசாலையில் நிமலரூபன் மரணமடைந்தான்.ஆனாலும் அவனது இறுதிக் கிரிகைகளையாவது பெற்றோர் தமது சுதந்திரத்துடன் நடாத்தி முடிக்கவில்லை.

அது போல தாக்குதலுக்கு இலக்காகி கோமா நிலையில் இருந்த டெல்றொக்சனும் மரணத்தை தழுவிக் கொண்டான். எனினும் கோமா நிலைியிலும் அவனது கால்கள் இரண்டும் சங்கிலியால் கட்டப்பட்டே இருந்தன.

இவை அனைத்தும் தமிழ் மக்களுக்கு அரசு செய்து வரும் ஆதிக்கம் என்றே கூறிக்கொள்ள வேண்டும். இதற்காக அரசியல் கைதிகளது விடுதலை படுகொலை ஆகியவற்றைக் கண்டித்து தமிழ் அரசியல் கட்சிகள் பல குரல் கொடுத்து வருகின்றது.

எனினும் சமாதானம் என்று அரச தரப்புக்களால் கூறிவரும் நிலையிலும், நாட்டில் உள்ள அனைவரும் சரிசமனாக கணிக்கப்படுகின்றனர் என்று கூறும் நிலையிலும் இவர்கள் இருவரது மரணங்களும் இலங்கையில் ஒவ்வொரு தமிழனும் எவ்வாறான நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றான் என்ற உண்மையினை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த நல்ல தருணமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது






ad

ad