புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2012

சட்டவிரோதமாக வெளிநாடு சென்று அரசியல் புகலிடம் கோருவோரை நாடு கடத்த வேண்டும்! கெஹலிய
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்று, தமிழர்களுக்கு இலங்கையில் பாதுகாப்பில்லையென பொய்ப்பிரசாரம் செய்து, அங்கு அரசியல் புகலிடம் கோருபவர்கள் அனைவரையும் இலங்கைக்கு நாடு கடத்துமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்று அங்கு அரசியல் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருப்பதனால், வெளிவிவகார அமைச்சு வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக சென்று அங்கு அரசியல் புகலிடம் கோருபவர்கள் அனைவரையும் இலங்கைக்கு நாடு கடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்லும் இலங்கையரின் எண்ணிக்கையின் காரணமாக அந்நாடுகளுக்கு சமாளிக்க முடியாத ஒரு பெரும் சவால் ஏற்பட்டிருப்பதனால் அப்பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு காண வேண்டுமாயின், அந்த அரசாங்கங்கள் சம்பந்தப்பட்ட இலங்கையரை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டுமென்று எமது அரசாங்கம் கேட்டிருப்பதாக ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இவ்வாண்டில் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்று அரசியல் அடைக்கலம் கோரும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த புலிகளுக்கு ஆதரவான சில அரசியல் சக்திகள் எங்கள் நாட்டில் உள்ள அரசியல் குழுக்களுடன் இருக்கும் தங்களின் நெருக்கமான தொடர்பை அடிப்படையாக வைத்து, இந்த ஆட் கடத்தல்களை மேற்கொண்டு வருவதை இலங்கை அரசாங்கம் இனங்கண்டுள்ள தென்றும் கூறினார்.
இவ்விதம் இலங்கையில் இருந்து ஆட்கடத்தலை மேற்கொண்ட இருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். இவர்கள் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு நூற்றுக்கணக்கான தமிழர்களை கடத்தி செல்ல எத்தனித்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள நல்ல, பலம் வாய்ந்த எல்.ரி.ரி.ஈயை ஆதரிக்கும் சக்திகளின் நிதி உதவியுடனேயே இவர்கள் இந்த ஆட்கடத்தல் நாடகத்தை மேடையேற்றி, தமிழர்கள் இலங்கையில் பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற போலிப் பிரசாரத்தை சர்வதேச ரீதியில் மேற்கொண்டு வருகிறார்கள் என்று கூறினார்.
ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மீளாய்வு எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் பின்னணியிலேயே இந்த அரச எதிர்ப்பு நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
புலம்பெயர்ந்த பிரதான தமிழ் அமைப்புகள் இத்தகைய சட்டவிரோத ஆட்கடத்தில் முயற்சியில் ஈடுபடுவோரை நிரபராதிகள் என்று காண்பிப்பதற்கு முயற்சிகள் எடுத்து வருவதாக தெரிவித்த அமைச்சர், இப்போது வெளிநாட்டு அரசாங்கங்கள் எமது புலம்பெயர்ந்த இலங்கை மக்களை உடனடியாக எங்கள் நாட்டுக்கு நாடு கடத்த வேண்டுமென்று இலங்கை அரசாங்கம் அவ்வரசாங்கங்களுக்கு அழுத்தங்களை கொடுத்து வருகின்றது.
தற்போது இலங்கைத் தமிழ் பிரஜைகளை படகுகள் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்திச் சென்று அங்கு அரசியல் புகலி டம் பெற்றுக் கொடுப்பதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கை இந்த ஆட்கடத்தல்காரர்களுக்கு நல்ல வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கும் நல்ல வியாபாரமாக மாறியிருக்கிறதென்று தெரிவித்தார்.
இந்த ஆட்கடத்தல்காரர்கள் அரசாங்கத்திற்கு எதிராக சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ad

ad