புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2012


நவநீதம்பிள்ளையை பதவி விலகுமாறு அமெரிக்கா கோரியது?
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும், அமெரிக்காவும் நவநீதம்பிள்ளையை பதவி விலகுமாறு கோரியதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை பதவி விலகுமாறு அமெரிக்கா கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இதனை நவநீதம்பிள்ளை மறுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பில் வேறு உயர் பதவி ஒன்றை வழங்குவதாகத் தெரிவித்து, இவ்வாறு பதவி விலகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாகவே நவநீதம்பிள்ளையின் இரண்டாம் தவணைப் பதவிக்காலம் குறைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது.

ad

ad