புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஆக., 2012


புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு கடன் அடிப்படையில் முச்சக்கர வண்டிகள் வழங்க ஏற்பாடு
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமுகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு முச்சக்கரவண்டிகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான கலந்துரையாடல் இன்றைய தினம் யாழ். கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதன் போது யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கு முச்சக்கர வண்டிகளை வழங்குவதற்கான நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
அதனடிப்படையில் முச்சக்கர வண்டியினைப் பெறுவதில் விருப்பம் உள்ளவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரையான காலப் பகுதிக்குள் எலயன்ஸ் வினாஸ் இல் விண்ணப்பங்களைப் பெற்று பூரணப்படுத்தி அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த சிறைச்சாலைகள் அமைச்சுடன் இணைந்து முதன் முறையாக எலயன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்படி முதற்கட்டமாக 25 முச்சக்கரவண்டிகள் வழங்கப்படவுள்ளன.
எனினும் முச்சக்கர வண்டியினை பெற விரும்புபவர்கள் சாரதி அனுமதிப் பத்திரம் உடையவர்களாகவும், வேறு வருமானம் இல்லாதவர்களாகவும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் இடத்து அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் முச்சக்கரவண்டிகள் வழங்கப்படும்.
இவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்கள் ஆரம்பகட்டமாக எதுவிதமான முற்கொடுப்பனவுகளும் வழங்க வேண்டியதில்லை.
அதன் பின்னர் வழங்கப்பட்டு அடுத்த மாதத்திலிருந்து பணத்தை எலயன்ஸ் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும்.
இதன் கால எல்லை 48 தொடக்கம் 72 மாதங்கள் வரையானது என யாழ். மாவட்ட எலயன்ஸ் முகாமையாளர் எஸ். நிசாந்த் தெரிவித்தார்.
தொடர்ந்து குறிப்பிடுகையில் முச்சக்கர வண்டியினை பெறுபவர்களுக்கான  காப்புறுதி மற்றும் பதிவு ஆகியன எமது நிறுவனத்தின் ஊடாக இலவசமாக செய்து கொடுக்கப்படும்.
அத்துடன் யுத்தத்தினால் கால்களை இழந்தவர்களுக்கு முச்சக்கர வண்டியினை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி போக்குவரத்து திணைக்களத்துடன் புனர்வாழ்வு அமைச்சின் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவர்களுக்கு வேண்டிய வகையில் தொழில்நுட்ப ரீதியில் மாற்றங்கள் செய்யப்பட்டு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் புனர்வாழ்வு நலன்புரி மீளாய்வுக்குழு பொறுப்பதிகாரி மேஜர் ஜகத்குமார் எலயன்ஸின் கொழும்பு உயர்மட்ட முகாமையாளர் செல்வராஜா யாழ் மாவட்ட முகாமையாளர் எஸ்.நிசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ad

ad