புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2012


மாகாண தேர்தலில் ஒதுங்கியிருந்தால் வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கே வாக்களித்திருப்பேன்! கருணா
தமிழன் ஒருவன் முதலமைச்சராக வர வேண்டும் என்பதற்காக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறோம் என்றும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் கூட்டமைப்பினர் கூறியிருந்தால் நான் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத் தான் வாக்களித்திருப்பேன் எ
ன பிரதி அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு வந்தாறுமூலை மகா விஷ்ணு ஆலய முன்றலில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் ருத்திரமலர் ஞானபாஸ்கரனுக்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கடந்த காலத்தில் இரண்டு தமிழர்கள் முதலமைச்சர்களாக இருந்துள்ளனர். அந்த வகையில் அடுத்த முதலமைச்சரும் தமிழராக இருக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களது எதிர்பார்ப்பாகும்.
கிழக்கு மாகாணத்தின் சனத்தொகை விகிதாசாரத்தின் அடிப்படையில், தனித்து எந்தத் தரப்பும் ஆட்சியை அமைத்து விட முடியாது. முழுமையாக அனைத்து தமிழர்களும் ஒருவருக்கு வாக்களித்தாலும் தமிழரை முதலமைச்சராக்க முடியாது.
இப்போதுள்ள நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஜனாதிபதி அவர்கள் யார் அதிகூடிய விருப்பு வாக்கு எடுக்கிறார்களோ
இவ்வாறான பல காரணங்களால் தான் பாராளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்டிருந்தேன். ஐயா நீங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடாதீர்கள் என்று கேட்டிருந்தேன். ஏனென்றால் உங்களால் முதலமைச்சரை அமைக்க முடியாது, அத்துடன், அரசுக்கிருக்கும் வாய்ப்பையும் குழப்பி விடாதீர்கள்.
எனவே இத் தேர்தலில் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று கேட்டிருந்தேன். பார்ப்போம் என்று கூறியிருந்தார்கள் ஆனால் பார்க்கவில்லை. வேட்பாளர்களைப் போட்டுவிட்டார்கள்.
அவர்கள் ஒரு ஒழுங்காகவர்களாக இருந்திருந்தால், தேசப்பற்றுள்ளவர்களாக இருந்திருந்தால் அத்துடன் கிழக்கு மாகாண தமிழர்களில் பற்றுடையவர்களாக இருந்திருந்தால் அவர்கள் கூறியிருக்க வேண்டும். நாங்கள் தமிழன் ஒருவன் முதலமைச்சராக வர வேண்டும் என்பதற்காக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறோம். ஆனால் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் என்று கூறியிருந்தால் நான் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத் தான் வாக்களித்திருப்பேன்.
ஏனென்றால் அவ்வளவு ஒற்றுமை புரிந்துணர்வு, தமிழ் தேசியத்தைப் பாதுகாக்கின்ற பற்று ஆனால் அவர்கள் அதனைத் தவறுவிட்டதுடன், கிழக்கு மாகாணத் தமிழனுக்குரிய தேசத் துரோகத்தையும் செய்து விட்டார்கள்.
ஆனால் வடக்கு மாகாணத்திலுள்ளவர்கள் இதனைப்பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஏனென்றால் வடக்கில் வென்றாலும், தோற்றாலும் தமிழன்தான் முதலமைச்சர். ஆனால் மாவை, சம்பந்தன், சுரேஸ், செல்வம் என அனைவரும் வந்து பிரச்சாரம் செய்கிறார்கள். அதனைப்பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
30 வருட போராட்டத்தில் பல துன்பங்களை சந்தித்திருக்கிறோம். உயிர்ப்பலி, பொருளாதார சிரமங்கள் என பலவற்றை இழந்தவர்கள். அப்போது உயிரை மட்டும் பாதுகாத்தால் போதும் என்று வாழ்ந்தோம்.
இந்த இடத்தில், யதார்த்தத்தைப் புரிந்து கொண்டவர்களாக இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றார்.
வந்தாறுமூலை சிறிலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் நந்தகுமாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளர்களான ருத்ரமலர் ஞர்னபாஸ்கரன், பிறேவோ கண்டி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

ad

ad