புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2012

சுவிசில் நான்காவது நாளாகத் தொடரும் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம்
சுவிசில் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் மூன்றாவது நாளைக் கடந்து நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.
நேற்று முன்தினம் முற்பகல் பதினொரு மணிக்கு சுவிசின் தலைநகர் பேர்ன் பாராளுமன்றத்தின் முன்பாகத் தொடங்கி செலத்தூன் நகரைச் சென்றடைந்த போது, அங்கு வாழும் தமிழ் மக்களும், ஈழத்தமிழரவையின் உறுப்பினரும், தமிழ் மக்களின் விடுதலைக்குக் குரல் கொடுப்பருமான அனோர் அம்மையார் ஆகியோர் ஈழப்பற்றாளன் வைகுந்தனை வரவேற்று உற்சாகப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, பீல் நகரை நோக்கிச் சென்ற விடுதலை நொக்கிய மிதிவண்டிப் பயணம் பீல் நகர தமிழ் மக்களால் தமிழீழத் தேசியக்கொடி, சுவிஸ் கொடி என்பவற்றை ஏந்திய வண்ணம் வரவேற்க்கப்பட்டு உற்சாகம் அளிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் குறைவாகக் காணப்பட்ட மக்களின் ஆதரவு தற்பொழுது அதிகரித்துள்ளது. எனினும் மேலும் மக்களின் ஆதரவு இருந்தால் அது போராட்டம் மீதான பார்வையை இன்னும் அதிகரிக்கச் செய்யும் என பீல் நகரத் தமிழ் மக்கள் கருத்துத் தெரிவித்தனர்.
நேற்றுமூன்றாவது நாளாகவும் உணர்வு பூர்வமாகத் தொடங்கிய விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம், பீல் நகரின் மத்தியிலிருந்து தொடங்கப்பட்டது. இதன்போது வைகுந்தனுக்கு ஆதரவு தெரிவித்து, செல்வி தமிழினி சுமார் பத்துக் கிலோமீற்றர் தூரம்வரையில் மிதிவண்டியில் பயணம் செய்தார்.
லங்கந்தால் மக்களாலும் உற்சாகம் அளிக்கப்பட்டு பாசல் சட், பாசல் ஆகிய மாநிலங்களைச் சென்றடைந்து மூன்றாவது நாள் 350 கிலோமீற்றறைக் கடந்த மிதிவண்டிப் பயணம் நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.
இன்றுபாசல் மாநிலத்தில் இருந்து முற்பகல் பதினொரு மணிக்குத் தொடங்கி லுட்சன் மாநிலத்தைச் சென்றடைந்து, மாலை ஊரி மாநிலத்தில் நிறைவடையவுளள்து.
தொடர்ந்து, நாளை ஊரி மாநிலத்திலிருந்து முற்பகல் பதினொரு மணிக்கு ஆரம்பித்த, சுவிற்ஸ் மாநிலத்தைச் சென்றடைந்து, அன்று மாலை சுக் மாநிலத்தில் நிறைவடையும்.
நாளை மறுதினம் முற்பகல் பதினொரு மணியளவில் சுக் மாநிலத்தில் இருந்து ஆரம்பித்து கிளாறவுஸ் மாநிலத்தைச் சென்றடையும். பின்னர் எதிர்வரும் 07ஆம் திகதி கிளாறவுஸ் மாநிலத்தில் இருந்து முற்பகல் பதினொரு மணிக்குத் தொடங்கி செங்காளன் மாநிலத்தைச் சென்றடையும்.
குறிப்பிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் ஆதரவு கொடுப்பதுடன் இணையத் தளங்களின் ஊடாகவும், நேரடியாகவும் கிடைக்கும் கோரிக்கைகள் அடங்கிய படிவத்தில் கையொப்பம் இட்டு வைகுந்தனிடம் ஒப்படைத்தால் அந்தக் கோரிக்கைகள் சுவிஸ் அரசாங்கத்திற்குக் கையளிக்கப்படுவதுடன், பகிரங்கமாகவும், மின்னஞ்சல் ஊடாகவும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்தப் போராட்டத்தின் ஊடாக லண்டனில் உண்ணாவிரதப் போராட்டத்தால் தன்னை உருகட்கிக் கொண்டுள்ள தேசப்பற்றுமிக்க சிவந்தனுக்கும் அதரவு தெரிவித்து நிற்பதைப் பலரும் நன்றெனக் கருத்துக் கூறியுள்ளனர்.
எதிர்வரும் 11ஆம் திகதி தமிழீழக் கிண்ணத்திற்கான மாபெரும் விளையாட்டுப் போட்டியை சுவிஸ் தமிழரில்லம் நடாத்துகின்றது. இருநாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நாள்வரைத் தொடரப் போகும் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் இன்னும் பல மாநிலங்களின் ஊடாகப் பயணிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ad

ad