புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2012

வைகோ, நெடுமாறன், சீமான் மீது எ.வ.வேலு தாக்கு
விழுப்புரம் மாவட்ட திமுக சார்பில் டெசோ மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் நேற்றிரவு நடந்தது. மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜனகராஜ் வரவேற்றார்.

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசினார். ’’முள்ளிவாய்க்காலில் நடந்த தாக்குதலுக்கு பிறகு உறவுகள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாத நிலை அங்குள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் என்ன விரும்புகிறார்கள், என்ன கோரிக்கை வைக்கின்றனர் என்பதை நிறைவேற்றத்தான் டெசோ மாநாட்டை கருணாநிதி நடத்தியுள்ளார்.

உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக தான் டெசோ மாநாடு நடத்தப்பட்டுள்ளது. மதுரையிலும் டெசோ மாநாடு நடந்துள்ளது.

அதில் இந்தியாவில் உள்ள தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால், சென்னையில் நடந்த மாநாட்டில் 13 நாட்டு பிரதிநிதிகள், வட இந்தியாவைச் சேர்ந்த 7 பிரதிநிதிகள் என 32 பேர் பங்கேற்று ஆய்வரங்கத்தில் பேசினர்.


எந்தெந்த தீர்மானங்களை நிறைவேற்றினால் நம் சொந்தங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று ஆய்வு செய்தார்கள்.

அதனடிப்படையில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. டெசோ மாநாட்டை விமர்சித்தவர்கள் யார்?. நானே தலைவர், நானே கட்சி, நானே தொண்டர் என்று கூறும் ஜெயலலிதா. பெட்டி கடை நடத்தும் வைகோ. திரைப்படத்துக்கு போனால் சரியான முதலாளி கிடைக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில் கட்சி தொடங்கிய சீமான்.

டெசோ மாநாடு நடந்து ஈழ தமிழர்களுக்கு ஏதோ நடந்துவிடும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே நினைக்கிறார். டெசோ மாநாட்டில் இலங்கையைச் சேர்ந்த 9 எம்பிக்கள் கலந்து கொள்ள இருந்தார்கள். டெசோவில் கலந்து கொண்டுவிட்டு நாட்டுக்கு திரும்பினால் கவனிக்கப்படுவீர்கள் என்று ராஜபக்சே பேசியிருக்கிறார்.
சீமான், நெடுமாறன், வைகோ கூட்டம் போட்டுள்ளனர். ராஜபக்சே ஏதும் பேசவில்லை. டெசோவை கருணாநிதி கையில் எடுத்துவிட்டார், ஈழ தமிழர்கள் உயர் பெற்றுவிடுவார்கள் என்பதால் ராஜபக்சே மிரட்டுகிறார். கவனித்து கொள்கிறேன் என்று சொன்னதால் இலங்கை எம்பிக்களின் பயணம் ரத்து செய்யப்படுகிறது. டெசோவில் பங்கேற்க முடியவில்லை என்பதை நினைத்து அவர்கள் அழுதார்கள். கவனிக்கிறேன் என்று ராஜபக்சே சொல்லும்போதே டெசோ வெற்றி பெற்றுவிட்டது.


ஈழ தமிழர்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டவர் தான் ஜெயலலிதா. திருமங்கலத்தில் ஈழம் என்ற வார்த்தையை சொன்னதற்காக பொடா சட்டத்தில் வேலூர் சிறையில் வைகோ 19 மாதம் அடைக்கப்பட்டார். இதுதான் ஈழத்தமிழர்கள் மீதான ஜெயலலிதாவின் பாசம்.


அவரை தாங்கி பிடிப்பதைவிட திமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்பது தான் அவர்களது நோக்கம்.

டெசோவை நடத்த விடாமல் தடுக்க முயற்சித்தனர். நீதிமன்றம் உத்தரவு பெறப்பட்ட 2 மணி நேரத்தில் மிகச்சிறப்பாக டெசோ மாநாட்டை கருணாநிதி நடத்தி காட்டினார். ஈழ தமிழர்களுக்கு தனி நாடு என்றால் அது கருணாநிதி ஒருவரால் தான் பெற்று தர முடியும். டெசோ மாநாடு மூலமாக ஈழ தமிழர்களுக்கு மறுவாழ்வு பிறக்கும். அந்த மறுவாழ்வு கருணாநிதியால் கிடைக்கும்’’என்று பேசினார்.

ad

ad