புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2012


பசீர் சேகுதாவூத் பதவியை ராஜினாமா செய்ததுபோல ஹக்கீமும் செய்யவேண்டும்!- எம்.எஸ்.ஜவாஹிர் சாலி
அமைச்சுப் பதவியோ பிரதியமைச்சுப் பதவியோ எனக்கு முக்கியமில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் முஸ்லிம் அரசியலும் முஸ்லிம் சமுதாயமும்தான் முக்கியமென்பதை தனது பதவியை தூக்கி எறிந்து பசீர் சேகுதாவூத் நிரூபித்துள்ளார். என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.ஜவாஹிர் சாலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.ஜவாஹிர் சாலி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமைச்சுப் பதவியோ பிரதியமைச்சுப் பதவியோ எனக்கு முக்கியமில்லை. எனக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் முஸ்லிம் அரசியலும் முஸ்லிம் சமுதாயமும்தான் முக்கியமென்பதை
முன்னாள் பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தனது பிரதியமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்ததன் மூலம் எடுத்துக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் எடுத்த இந்த திடீர் முடிவையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
பசீர் சேகுதாவூத்தின் இந்த நடவடிக்கையானது இலங்கை முஸ்லிம் அரசியலில் பெரும் உற்சகாத்தை கொடுப்பதுடன் மாற்றத்தையும் உண்டாக்கும். இதே விடயத்தையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் செய்ய வேண்டும்.
கடந்த சில தினங்களாக பசீர் சேகுதாவூத் பற்றி அரசாங்கத்தின் அமைச்சர் பதவியொன்றை பெறுவதற்காக வேண்டி அரசாங்கத்திற்கு சார்பான வேலைகளில் ஈடுபடுகின்றார் என பொய்யான பிரச்சாரங்களை சிலர் உருவாக்கினார்கள்.
எனக்கு அப்படியொரு எண்ணமில்லை. எனக்கு பதவியொரு முக்கியமில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் முஸ்லிம் அரசியலும் முஸ்லிம் சமுதாயமும்தான் முக்கியமென்பதை தனது பதவியை தூக்கி எறிந்து பசீர் சேகுதாவூத் அதை நிரூபித்துள்ளார்.
நான் அப்படியானவர் அல்ல என்பதை காட்டுவதற்காகவும் எனக்கு பிரதியமைச்சுப்பதவியுத் தேவiயில்லை அரச வளங்களை பயன் படுத்த தேவையுமில்லை என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டு முஸ்லிம் காங்கிரசின் பிரச்சாரத்திற்காக முழுமையாக தன்னை ஈடுபடுத்த தீர்மானித்தமைக்காக எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அவருக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.
இதே வேலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமும் செய்ய வேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் காங்கிரசில் போட்டியிடும் எந்தவொரு தனி வேட்பாளரையும் ஆதரிக்காமல் கட்சி என்ற ரீதியில் கட்சி வேட்பாளர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து எதிர்க்கட்சியினரின் பொய்ப்பிரச்சாரங்களை இல்லாமல் செய்யும் வேலைகளில் ஈடுபடவேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன்.
என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad