புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2012

கைலாய மலையில் ரஞ்சிதாவுடன் நித்தி : மதுரை ஆதினம் புலம்பல்
நித்யானந்தா கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.


இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் திபெத்தில் உள்ள கைலாய மலைக்கு புறப்பட்டு சென்றார். நேபாளம் வழியாக அவர் சென்றதாக கூறப்படுகிறது.

நித்யானந்தா-ரஞ்சிதாவின் பாஸ்போர்ட்டுகளுடன் டெல்லி விமான நிலையத்தில், வாலிபர் ஒருவர் சிக்கியுள்ளார். அவரது பெயர் கவுசிக். காட்மாண்டுவில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்ற அவரது உடைமைகளை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது அவர் வைத் திருந்த பையில் 32 பாஸ்போர்ட் டுகள் இருந்தன. இவைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதில் நித்யானந்தா, ரஞ்சிதா பாஸ்போர்ட்டுகள் மட்டு மின்றி நித்யானந்தா சீடர்கள் 30 பேரின் பாஸ்போர்ட் டுகளும் இருந்தன.

இந்த சூழ்நிலையில் மதுரயைல் இன்று ஆதீனம் அரு ணகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது அவரிடம் நித்தி -ரஞ்சி கைலாய மலை பயணம் குறித்து கேட்டபோது, ‘’ரஞ்சிதாவுடன் நித்தி யானந்தா சென்றது எனக்கு தெரியாது. அவர்களது பாஸ்போர்ட் சிக்கிய விவகாரம் செய்திகள் மூலம் தெரிந்துகொண்டு வருத்தப்பட்டேன்.

ரஞ்சிதாவுடன் செல்வது பற்றி நித்தியானந்தா என்னிடம் கூறவில்லை. இதனால் எனக்கு மிகுந்த வருத்தம். அவர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்று தெரியவில்லை’’ என்று கூறினார்.

அவர் மேலும், ‘’மதுரை ஆதீன மடத்து சொத்துக்களை மீட்டு தருவதாக கூறினார் நித்தியானந்தா. அதற்காகத்தான் அவரை இளைய ஆதீனமாக அறிவித்தேன். ஆனால் அவர் தொடர்ந்து மடத்துக்கு எதிரான செய்கைகளில் ஈடுபட்டு வருகிறார்’’ என்று புலம்பினார்.

ad

ad