புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2012


மன்னார் நீதவான் மீதான அச்சுறுத்தல்! சந்தேக நபர்கள் மீது நடவடிக்கை எதுவுமில்லை! சட்டமா அதிபர்
மன்னார் நீதவானுக்கு விடுக்கப்பட்ட தொலைபேசி மூலமான அச்சுறுத்தல்கள் தொடர்பான சந்தேக நபர்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக அறிவுறுத்தல்களைக் கோரும் அறிக்கையொன்றை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் கையளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நீதிமன்றத்தை தாக்கிய சந்தேக நபர்களை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் கைதுகள் எதுவும் இடம்பெறவில்லை.
நீதவானுக்கு எதிரான அச்சுறுத்தல் மற்றும் நீதின்ற கட்டித்தொகுதி மீதான தாக்குதல் தொடர்பாக இருமுனை விசாரணைகள் நடைபெறுவதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண கூறினார்.
மன்னார் நீதவான் ஏ. ஜூட்ஸனுக்கு ஜூலை 18 ஆம் திகதி விடுக்கப்பட்ட தொலைபேசி அச்சுறுத்தல் குறித்த விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பூர்த்தி செய்துள்ளனர்.
எனினும் நீதிமன்றகட்டிடம் மீதான தாக்குதல் தொடர்பாக விசாரணைகள் தொடர்கின்றன.
தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் 26 சந்தே நபர்களை செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் மற்றும் நீதிமன்றத்தை தாக்கியவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி ஜூலை 18 ஆம் திகதியிலிருந்து மன்னார் சட்டத்தரணிகள் தொடர்ந்தும் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad