புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2012


அரசு - கூட்டமைப்பு பேச்சுவார்த்தை! தென்னாபிரிக்கா அனுசரணை? இருதரப்பையும் தென்னாபிரிக்க தூதுக்குழு சந்திப்பு
 இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் அனுசரணையாளராக தென்னாபிரிக்கா செயற்படவுள்ளது. அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதை வரவேற்றுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.
தென்னாபிரிக்காவின் பிரதி சர்வதேச உறவுகளுக்கான அமைச்சர் ஏப்ரஹாம் ஏப்ரஹாம் தலைமையிலான குழு சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்தது.
இக்குழு அரச தரப்பையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சந்தித்து பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துள்ளது தொடர்பாகவும், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்து கொண்டது.
தென்னாபிரிக்க எம்.பி.க்கள் குழுத்தலைவர் ஏப்ரஹாம் ஏப்ரஹாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்திக்கும் முன்னரும் சந்தித்த பின்னரும் கூட்டமைப்பு எம்.பி.க்களைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
தென்னாபிரிக்க குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையில் அங்கம் வகித்த அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, ஜீ.௭ல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை ஸ்தம்பித நிலையை அடைந்ததற்கான காரணங்களைக் கேட்டறிந்து கொண்டதாகவும் அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இக்குழுவினர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச, ௭திர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
தென்னாபிரிக்க பிரதி அமைச்சர் ஏப்ரஹாம் ஏப்ரஹாம் தலைமையிலான குழுவினரிடம் தமிழ்த் தேசியக் தேசியக் கூட்டமைப்பு ௭ம்.பி.க்கள் வடக்கு கிழக்கில் அளவுக்கதிகமான இராணுவ பிரசன்னம், மீளக்குடியமர்தலில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் தமிழ் மக்களின் பாரம்பரியக் காணிகள் அபகரிக்கப்படுதல், பேச்சுவார்த்தை குழம்பியிருப்பது அத்துமீறிய சிங்களக் குடியேற்றம் போன்ற முக்கிய பிரச்சினைகளை ௭டுத்து விளக்கியதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ௭ம்.பி தெரிவித்தார்.
தென்னாபிரிக்க குழுவினருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா, ௭ம்.௭ஸ்.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரடங்கிய குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
தென்னாபிரிக்காவில் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்ட விதம் குறித்து ஆராய நேரடியாக விஜயம் செய்யுமாறு தென்னாபிரிக்க தூதுக்குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரச தரப்புக்கும் அழைப்பு விடுத்துள்ளது. 

ad

ad