புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2012


இலங்கையில் தமிழ் மக்களின் தற்போதைய நிலை குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் விசேட விவாதம்
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் ஒன்று அடுத்த வாரமளவில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் குறித்த விவாதத்துக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா. மனிதவுரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், யுத்த பாதிப்புக்குள்ளான தமிழர்களின் வாழ்க்கை சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இவ் விவாதத்தில் விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவில் தமிழீழ ஆதரவாளர்களின் மாநாடு எவ்வாறு செல்வாக்கு செலுத்தும் என்பது குறித்தும், இந்த விவாதத்தின் போது முக்கிய அவதானம் செலுத்தப்படும் என கூறப்படுகிறது.

ad

ad