புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2012

முஸ்லிம்களும் ஏற்கும் வகையில் நீதியான நிரந்தரத் தீர்வே தேவை கூட்டமைப்பின் விருப்பமும் அதுவே என்கிறார் சம்பந்தன்
முஸ்லிம் மக்களுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது இலகுவானதாக இருக்கும். இதனை உலகத்தலைவர்கள் சிலர் எம்மைச் சந்தித்துப் பேசியபோது தெரிவித்தனர்.

அந்த அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற முஸ்லிம்களுடன் ஒற்றுமையாக வாழக்கூடியதாகத் தாராளமாக விட்டுக்கொடுத்து எமது நீண்ட கால அரசியல் அபிலாசைகளுக்கு நிரந்தரமானதும் நியாயமானதுமானதும் மற்றும் நிலைத்து நிற்கக்கூடியதுமான அரசியல் தீர்வு ஒன்றைக் காண விரும்புகின்றோம் எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் சி.தண்டாயுதபாணிக்கு ஆதரவு தெரிவித்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை திருகோணமலை நியூசில்வர்ஸ்டார் ஹோட்டலில் திருகோணமலை கல்விச் சமூகம் ஒழுங்கு செய்திருந்த பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய போது சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு உரையாற்றிய சம்பந்தன் கூறியவை வருமாறு:
மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிர்ஸின் தலைவர் அஷ்ரப்புடன் அன்று நடத்தப்பட்ட பேச்சின்போது வடக்கு மாகாணத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை ஒன்றையும் கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகளை இணைத்து தென்கிழக்கு மாகாண சபை ஒன்றையும் உருவாக்குவது பற்றி ஆராயப்பட்டது.
அதன்படி, வடக்கு மாகாண சபைக்குத் தமிழர் ஒருவர் முதலமைச்சராகவும் முஸ்லிம் ஒருவர் பிரதி முதலமைச்சராகவும் இருக்க வேண்டும் என்றும் தென்கிழக்கு மாகாணசபைக்கு முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராகவும் தமிழர் ஒருவர் பிரதி முதலமைச்சராகவும் இருக்க வேண்டும் என்று அப்பேச்சின் போது பிரஸ்தாபிக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற முஸ்லிம்களுடன் ஒற்றுமையாக வாழக்கூடியதாக தாராளமாக விட்டுக்கொடுத்து நீண்ட கால அரசியல் அபிலாசைகளுக்கு நிரந்தரமானதும் நியாயமானதுமானதும் மற்றும் நிலைத்து நிற்கக்கூடியதுமான அரசியல் தீர்வு ஒன்றைக் காண விரும்புகின்றோம்என்றார்.

ad

ad