புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஆக., 2012


சரத் பொன்சேகாவை விசாரித்த இராணுவ நீதிமன்ற நீதிபதி மேஜா் ஜெனரல் அருண ஜெயதிலக புற்றுநோயால் மரணம்
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட முதலாவது இராணுவ நீதிமன்ற நீதிபதியும், இலங்கை இராணுவத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் அருண ஜெயதிலக புற்றுநோயால் மரணமாகியுள்ளார்.
இவர் மரணமாகும் போது  இலங்கை இராணுவத்தின் தொண்டர் படைகளின் தளபதி மற்றும் சிங்கப் படைப்பிரிவின் தளபதியாக இருந்து வந்தார்.
54 வயதான மேஜர் ஜெனரல் அருண ஜெயதிலக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் மரணமானார்.

34 ஆண்டுகள் இலங்கை இராணுவத்தில் பணியாற்றியுள்ள அவர், இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா,சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பயிற்சிகளைப் பெற்றவர்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கிழக்கிலும், வடக்கிலும் தீவிரமாக ஈடுபட்டவர்.
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலம் பணியாற்றிய அவர், வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்திலும் பங்கேற்றவர்.
போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட முதலாவது இராணுவ நீதிமன்றிலும் இவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
மேஜர் ஜெனரல் அருண ஜெயதிலகவின் இறுதிச்சடங்கு இன்று கண்டியில் நடைபெறவுள்ளது.

ad

ad