புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2012


தஞ்சக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா ஏற்றுக்கொள்ள முடிவு
ஆண்டொன்றுக்கு இருபதாயிரம் தஞ்சக் கோரிக்கையாளர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விசேட கமிட்டி ஒன்றின் அறிக்கை மூலமாக இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோத தஞ்சக் கோரிக்கையாளர்களின் வருகை அதிகரித்ததைத் தொடர்ந்து இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து அதிகளவானோர் சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்வது தொடர்பாக கொழும்பு ஊடகமொன்று தொடுத்த கேள்வி ஒன்றுக்கு இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இரண்டாம் இணைப்பு
கூடுதலான அகதிகளை ஏற்றுக்கொள்ள அவுஸ்திரேலியா  முடிவு
அவுஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக நாற்பது சதவீதம் அகதிகளை ஏற்றுக்கொள்ளும் என்று பிரதமர் ஜூலியா கிலார்ட் அறிவித்துள்ளார்.
கூடுதலான அகதிகளை உள்வாங்க எடுக்கப்பட்டுள்ள முடிவும், தொலைதூர பசுபிக் தீவுகளில் தடுப்பு முகாம்களை அமைத்து, அகதித் தஞ்சம் கோருபவர்களை அங்கு தங்க வைக்கும் நடவடிக்கையை முன்னெடுப்பதன் மூலமும், அவுஸ்திரேலியாவில் குடியேற விரும்புகிறவர்கள் முன்கூட்டியே அதற்கான விண்ணப்பத்தை அனுப்புவதை வலியுறுத்த முடியும் எனவும் ஜூலியா கிலார்ட் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம், அகதித் தஞ்சம் கோரும் நோக்கில் ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொள்வதை தடுக்க முடியும் எனவும் அவுஸ்திரேலியப் பிரதமர் கூறுகிறார்.
அவுஸ்திரேலியாவை சென்றடையும் நோக்கில், மோசமான நிலையில் உள்ள படகுகள் மூலம் ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்டவர்களில் அறுநூறுக்கும் அதிகமானவர்கள் கடந்த ஓராண்டில் மட்டும் கடலில் மூழ்கியுள்ளனர்.
கூடுதலான அகதிகளை உள்வாங்குவது எனும் அரசின் முடிவு, சுயாதீனமான ஒரு குழுவின் பரிந்துரைகளை அடுத்தே வந்துள்ளது.

ad

ad