புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2012


vidios photos  -thiruma kalaignar 
       ழம் தொடர்பாக, தமிழகக் கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுவது தொடர்ந்தபடியே இருக்கிறது. அதேநேரத்தில், ஈழச்சிக்கலை உலகம் எப்படிப் பார்க்கிறது என்பது பற்றிய அக்கறை இங்கு குறைவாகவே உள்ளது. உலகப் பார்வை குறித்த ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்டாக அமைந்தது டெசோ மாநாட்டின் காலை நிகழ்வான ஆய்வரங்கம் (Conclave).

சென்னை அக்கார்டு ஓட்டலில் டெசோ உறுப்பினர் கள், இலங்கைத் தமிழ் பிரதிநிதிகள், ஐரோப்பிய-ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், புலம் பெயர் தமிழர்கள் உள்ளிட்ட 34 பேர் கலந்து கொண்ட இந்த ஆய்வரங்கத்தை தொடங்கி வைத்தார், டெசோ அமைப்பின் தலைவரான கலைஞர். 

ஆங்கிலத்தில் அமைந்த அவரது தொடக்க உரையில், ஈழத்தமிழர் நலனுக்காக தி.மு.க மேற்கொண்ட நடவடிக்கைகளை விவரித்துவிட்டு, மூன்று கட்டத் தீர்வுகளை முன்வைத்தார்.  உடனடித் தீர்வு என்ற முறையில், போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த தமிழர்களை மறுகுடியமர்த்தல், மறுவாழ்வு அளித்தல், நிவாரணம் வழங்குதல் உள்ளிட்டவற்றை நிறைவேற்றுதல். இடைக்காலத் தீர்வாக, ஈழத்தமிழர்களின் வாழ்க்கைக்குத் தேவையான கட்டமைப்பு, குடிமை வசதிகள், மறு கட்டுமானம், சொத்துரிமை மீட்பு, கல்வி-வேலைவாய்ப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளை அளித்தல் உள் ளிட்டவற்றை செயல்படுத்துதல். நிரந்தரத் தீர்வாக, ஈழப்பிரச் சினைக்கான அரசியல் தீர்வு மேற்கொள்ளப்படவேண்டும் என்பதைக் கலைஞர் வலியுறுத்தினார். 



இந்தத் தீர்வுகள் குறித்து உருவாக்கப்பட்டிருந்த வரைவுத் தீர்மானங்கள் (நக்கீரன் ஏற்கனவே வெளி யிட்டுள்ளது) ஆய்வரங்கப் பிரதிநிதிகள் முன்வைக்கப்பட்டு விவாதங்கள் தொடங்கின. ஐ.நா.மனித உரிமை அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தமிழீழப் பகுதியில் உள்ள ராணுவ முகாம்களை அகற்றி, முள்வேலி முகாமில் உள்ள தமிழர்களை அவர்களின் சொந்த நிலத்தில் மறுகுடியேற்றம் செய்வது பற்றிய டெசோ தீர்மானம் முன்வைக்கப்பட்டதும் விவாதங்கள் விறுவிறுப்பாயின.

""இந்தத் தீர்மானத்தை உங்கள் இந்தியா ஆதரித்து வாக்களித்திருக்கிறது. அதனால் இதுபற்றி இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும். அதைச் செய்யும்படி வலியுறுத்துங்கள். இந்தப் பிராந்தி யத்திலேயே பெரிய நாடான இந்தியா ஒதுங்கியிருந்தால், ஐ.நா எப்படி இதில் தலையிடும்?'' என துருக்கி நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு மனித உரிமை ஆணையத் தூதர் கெமால் இல்திரிம்ஸ், நைஜீரியா நாட்டு எம்.பி அப்துல் ரசாக் மேமோ, மொராக்கோ நாட்டின் தேசிய உண்மை மற்றும் நீதி ஆணையத் தலைவர் அஃபெகோ முபாரக் உள்ளிட்டோர்  கேட்டனர். ஆய்வரங்கில் இருந்த டெசோ பிரதிநிதிகள், தி.மு.க. பிரமுகர்கள், "இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இலங்கைக்கு ஆதரவாக இருக்கிறது' என்பதை மெல்ல எடுத்துச் சொன்னபோது, ""இந்தியா தனது நிலையில் மாற்றம் ஏற்படுத்தாவிட்டால் ஐ.நா மட்டும் தமிழர் நலனைக் கவனிக்கும் என்று எப்படிச் சொல்ல முடியும்?''’என்று வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கேட்டனர். 

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றிய டெசோ வரைவுத் தீர்மானத்தின்மீது விவாதம் நடந்தபோது, அந்தப் போரில் இலங்கை ராணுவம்-விடுதலைப்புலிகள் என இருதரப்பிலும் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன என்று வெளியாகியுள்ள அறிக்கைகளை அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் தேசிய இயக்குநர் ஆனந்த் குருசாமி எடுத்துச்சொல்ல, மலேசியா எம்.பி. யுஸ்மாடி யூசுஃப், இலங்கை நவ சமாஜ கட்சியின் விக்ரமபாகு கர்ணரத்னே, இங்கிலாந்திலிருந்து வந்திருந்த புலம்பெயர் தமிழர்களான குகதாசன், குகசேனன், சிவானந்த ஜோதி உள்ளிட்டோர் சிங்கள ராணுவத்தின் மனிதப் படுகொலை களின் தன்மையை விளக்கினர்.

டெசோவின் வரைவுத் தீர்மானங்களை உலக நாடுகளின் பிரதிநிதிகள் உடனடியாக ஏற்றுக்கொள்ள வில்லை. அதன் சாதகபாதகங்களை அலசி ஆராய்ந்தனர். ""இலங்கையில் தமிழர்களின் விடுதலைக்கானப் போராட்டம் நடக்கிறது என்பதே பல நாடுகளுக்குத் தெரியாது. அங்கே தீவிரவாதிகள் இருந்தார்கள். அவர்களை அந்த நாட்டு அரசு அழித்துவிட்டது என்றுதான் செய்தி பரவியுள்ளது. தமிழர்களின் உரிமைகள் குறித்து உலக நாடுகளின் கவனத்தை நீங்கள் ஈர்க்கவேண்டும். தமிழர்களின் நியாயங்களை உலக அரங்கில் எடுத்துச் சொல்லவேண்டும். எல்லாவற்றையும் ஐ.நா. செய்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது'' என்பதை ஸ்வீடன் எம்.பி. நசீம் மாலிக், நைஜீரியாவைச் சேர்ந்த மூசா அகமது உள்ளிட்டோர் விரிவாக எடுத்துச் சொன்னார்கள். 

தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தியளவிலான பிரதிநிதிகளாகப் பங்கேற்றிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ்பாஸ்வான், தேசிய மாநாட்டுக் கட்சியின் எம்.பி. எஸ்.டி.ஷாரிக், தேசியவாத காங்கிரஸை சேர்ந்த கோவிந்தராவ் அடிக் உள்ளிட்டவர்களுக்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் முன்வைத்த வாதங்கள் ஆச்சரியத்தை அளித்தன. டெசோ தலைவரான கலைஞரின் உன்னிப்பானப் பார்வை, இந்த விவாதத் தின் மீதான அவரது ஆர்வத்தை வெளிப்படுத்தியது. 




சுவீடனின் நசிம் மாலிக் எம்.பி. மிகவும் தெளிவாக, ""முதலில் இந்தியாவை இப்பிரச்சினையில் தலையிடச் சொல்லுங்கள். அப்புறம் சார்க் போன்ற தெற்காசிய அமைப்புகள், ஆசிய அளவிலான அமைப்புகள் இவற்றின் கவனத்திற்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்று விவாதியுங்கள். அப்போதுதான் உலகநாடுகளின் கவனம் ஈழத்தின் பக்கம் திரும்பும். அதன்பிறகு, ஐ.நா.விடம் இந்தப் பிரச்சினையைக் கொண்டு செல்லும்போது பல நாடு களின் வலுவான ஆதரவு கிடைக்கும். பொதுவாக் கெடுப்பு, தனிநாடு போன்ற கோரிக்கைகளுக்கு வெற்றி கிடைக்கும். இதையெல்லாம் செய்யாமல் ஐ.நாவிடம் நேரடியாகப் போவது சரியான நடைமுறையாக (platform) இருக்காது'' என்று விளக்கினார்.

வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலரும் சட்டநுணுக்கங்களை அறிந்த வழக்கறிஞர்கள். அதனால், ஐ.நா. சட்டதிட்டங்கள் என்ன சொல் கின்றன, உலகளவிலான மற்ற அமைப்புகளின் செயல்பாடுகள் என்ன என்பதையெல்லாம் ஈழப்பிரச் சினைகளுடன் தொடர்புபடுத்திப் பேசினர். இந்தியாவில் உள்ள ஈழஅகதிகளுக்கு குடியுரிமை தரவேண்டும் என்கிற வரைவுத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, ""இது தொடர்பான ஐ.நா. சட்டதிட்டத்தில் இந்தியா இன்னும் கையெழுத்தே இடவில்லை. பிறகெப்படி குடியுரிமை கொடுக்கும்? அதுமட்டுமல்ல, இதுபோல பல நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்களுக்கு அந்தந்த நாடுகளிலேயே குடியுரிமை வழங்கப்பட்டுவிட்டால், உங்களின் நீண்டகாலக் கோரிக்கையான தமிழீழத்தின் தேவையே இல்லாமல் போய்விடும். மேலும், எங்கள் நாடுகளிலும் பிறநாட்டு அகதிகள் இருக்கிறார்கள். அவர்களும் இதே உரிமைகளைக் கோரினால் பல நாடுகளில் சிக்கல்கள் ஏற்படும்'' என்றனர். இது பற்றி தமிழகப் பிரதிநிதிகளின் கருத்துகளும் முன்வைக்கப்பட, நீண்ட விவாதத்திற்குப்பின் இந்தத் தீர்மானத்தை  வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ஏற்றனர்.

புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளாகப் பங்கேற்றவர்கள், ""ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின்படி 13-வது சட்டதிருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்'' என்று சொல்ல,    அது தொடர்பான விளக்கங்களை விக்ரமபாகு கர்ணரத்ன முன்வைத்தார். விவாதம் நீண்டு கொண்டே போனநிலையில், டி.ஆர்.பாலு எம்.பி குறுக்கிட்டு, "13-வது சட்ட திருத்தம் பற்றி தமிழர்களிடையிலேயே மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன' என்று சொல்லி, அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தி.மு.க இளைஞரணி துணைச் செயலாளரும் யுனெஸ்கோவின் ஆசிய-பசிபிக் மையத்தின் ஆலோசகருமான அசன்முகமது ஜின்னா பல புள்ளிவிவரங்களைப் பிரதிநிதிகளுக்குக் கொடுத்தபடி இருந்தார்.

துருக்கியின் கெமால் இல்திரிம்ஸ் பேசும்போது, ""தமிழக அளவிலேயே இதுபற்றி பேசிக்கொண்டு, எங்களைப் போன்றவர்களை அழைத்து வருவதால் மட்டும் ஈழப்பிரச்சினையை உலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுவிட முடியாது. நான் பல நாட்டு அதிபர்களுடன் உரையாடியிருக்கிறேன். நல்ல தொடர்புகள் உள்ளன. இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு (organisation of Islamic countries), அமெரிக்க நாடுகளின் அமைப்பு (Organisation of American countries)  ஆகியவற்றில் இது பற்றி விவாதித்து, அடுத்த டெசோ மாநாட்டை அர்ஜென்டினாவில் நடத்த நான் ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் அங்கே வந்து கருத்துகளைப் பதியுங்கள். உலகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லுங்கள்'' என்றார் அழுத்தமாக.

உலகம் எந்தக் கோணத்தில் ஈழப்பிரச்சினையைப் பார்க்கிறது என்பதையும் எந்தளவுக்கு உலகத்திற்கு நாம் இந்தப் பிரச்சினையை உணர்த்தியிருக்கிறோம் என்பதையும் தெளிவுபடுத்தக்கூடியதாக இருந்தது டெசோ ஆய்வரங்கம்.

-லெனின்  
படங்கள் : எஸ்.பி. சுந்தர்

ஆய்வரங்கத்தில் நடந்த விவாதத்திற்குப் பின் 14 தீர்மானங்கள் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப் பட்டன. அவற்றில் முக்கியமானவை.

* இலங்கை அரசின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் மேற்பார்வைக் குழு அமைக்கப்படவேண்டும்.

*  போர்க்குற்றங்களை ஐ.நா. அவை கண்டறிந்து தண்டிக்க வேண்டும்.

* இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து ஐ.நா.மன்றத்தில் தீர்மானம் கொண்டுவர இந்தியா வலியுறுத்தவேண்டும்.

* தமிழீழப் பகுதியிலிருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்ள ஐ.நா. நடவடிக்கை எடுக்கவேண்டும்.

* இலங்கைத் தமிழர்களிடம் ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு.

* இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளுக்கு குடியுரிமை.

* இலங்கை சிறையில் உள்ள தமிழர்களின் விடுதலை.  கல்வி -வேலைவாய்ப்பு -வணிக உரிமை


டெசோ மாநாடு - சென்னை 2012 

கலைஞர் பேச்சு



டெசோ மாநாடு - சென்னை 2012 - தலைவர்கள் பேச்சு...



ராம்விலாஸ் பஸ்வான் எம்.பி. - பேச்சு



தொல்.திருமாவளவன் எம்.பி. - பேச்சு



பேராசிரியர் சுப.வீரபாண்டியன பேச்சு...



திரு.யுஸ்மாடி யுசுஃப் எம்.பி. - மலேசியா - பேச்சு...

ad

ad