புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 செப்., 2012



புதிய இசைச் சாதனை படைத்த பவதாரனியின் பாரதி கலைக் கோயில் குழுவினருக்கு கனடிய மக்கள் மகுடம்
 பெருந்
திரளான மக்களின் பாட்டொலிகளுடனும் , ஆடலுடனும் நேற்று நண்பகல் 1 மணியளவில் பவதாரனியின் பாரதி கலைக் கோயில் குழுவினரின் 48 மணி நேர இடைவிடாத
இன்னிசை மழை சாதனை முடிவுற்றது. மார்க்கம் கவுன்சிலர் லோகன் கணபதியின் ஏற்பாட்டில் அவரது நகரவை மன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடகர்களின் துணையுடன் , முப்பதுக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களால் வெகு சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது.
 
மார்க்கம் மேயர் Frank Scarpitti , கவுன்சிலர் லோகன் கணபதி , பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன் மற்றும்  மார்க்கம் ஸ்ரோஃப்வில் மருத்துவமனையைச் சேர்ந்த ஆலன பெல் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 
 
இந்த சாதனை மூலம் 56000 டொலர்கள் நிதி சேகரிக்கப்பட்டு ஸ்ரோஃப்வில் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 5000 டொலர்களை கனடிய தமிழர் பல் வைத்திய அமைப்பு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இறுதி நிகழ்வின் போது இசைச் சாதனை புரிந்த பாரதி கலைக்கோயில் இளம் கலைகனர்கள் அனைவருக்கும் மார்க்கம் மேயர் Frank Scarpitti மற்றும் கவுன்சிலர்  லோகன் கணபதி ஆகியோர் சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.
 
இந்நிகழ்வின் போது உரையாற்றிய பாரதி கலைக் கோயிலின் அதிபர் மதிவாசன் அவர்கள் " தமது குழந்தைகள் தொடர்ந்தும் இது போன்ற நற்பணிக்காக மற்றுமொரு தேசிய அளவிலான சாதனைச் செய்ய உள்ளார்கள் எனக் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு தொகுப்பு காணொளியை  வாசகர்களுக்காக வழங்கியுள்ளோம். பார்த்து மகிழலாம்.
 
48 மணி நேர இடைவிடாத இன்னிசை மழையின் முழுத் தொகுப்பினையும் பிரபா பாலகிருஷ்ணன் வழங்கியிருந்தார். இவர் மூன்று நாள் தூங்காது இந்த இசை நிகழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இவரது பாடலுடன் ஆரம்பிக்கப்பட்ட இன்னிசை மழை இறுதியில் இவர் பாடலுடனே முடிவுக்கு வந்தது.  
 
 
 காணொளியை (video) வாசகர்களுக்காக வழங்கியுள்ளோம். பார்த்து மகிழலாம்.
 
Photos Thanks to Ninaivukal.com ( Gana Arumugam)
 
 
Photos Thanks to Ninaivukal.com ( Gana Arumugam)
 

ad

ad