புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2012


மகிந்த வருகையை எதிர்த்து இலங்கைத் தூதரகத்தை முற்றுகையி​டும் போராட்டம்! திருமாவளவன் அறிவிப்பு
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் வருகையை எதிர்த்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னையில் இலங்கைத் தூதரகத்தை விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகையிடும் போராட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய பிரதேச மாநிலத்தில் சாஞ்சி அருகே பௌத்த கல்வி மையம் ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக சிங்கள இனவெறியன் ராஜபக்ச இந்தியாவுக்கு வருகிறார்.
தமிழினத்திற்கு எதிரான இனப்படுகொலையை அரங்கேற்றி, இலட்சக் கணக்கில் தமிழர்களைக் கொன்று குவித்த போர்க் குற்றவாளி, ராஜபக்சவுக்கு, எந்த உயிருக்கும் சிறு தீங்கும் இழைக்கக் கூடாது என்று சொன்ன புத்தர் பெயரிலான கல்வி மையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்க எந்த அருகதையும் இல்லை.
ராஜபக்சவின் வருகைக்கு எதிராக அனைத்து இயக்கங்களும் போராடி வருகிற நிலையில், ஒட்டுமொத்தத் தமிழினத்தின் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக சேலத்தில் விஜயராஜ் என்ற இளைஞர் தீக்குளித்து தன் உயிரைப் போக்கியுள்ளார்.
இந்நிலையில் ராஜபக்சே வை இந்தியாவுக்கு அழைத்த பாரதிய ஜனதா கட்சியையும், அனுமதியளித்த காங்கிரஸ் அரசையும் கண்டித்தும், ராஜபக்சேவின் வருகைக்கு இந்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ராஜபக்ச வருகைதரும் 21-9-2012 காலை 10 மணியளவில் சென்னையில் இலங்கைத் தூதரகத்தை விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகையிடும் போராட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என தொல். திருமாவளவன் இவ்வாறு கூறியுள்ளார்.

ad

ad