புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2012


தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து வந்தவர்களால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை அடுத்து கிழக்கு மாகாணசபைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தெரிவுசெய்யப்பட்ட 11 உறுப்பினர்களும் திருகோணமலைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான அவசர கூட்டம் இன்று இரவு திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. ஆர்.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ்
பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுமத்திரன், பா.அரியநேத்திரன், செல்வராசா, யோகேஸ்வரன் ஆகியோருடன் மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட 11 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சி நிபந்தனை அற்ற ஆதரவு வழங்கியிருக்கிறது. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷின் ஆதரவை கோரியிருக்கிறோம். அவர்களின் பதில் கிடைக்கும் வரை நாம் பொறுத்திருக்க வேண்டும் என சம்பந்தன் இக் கூட்டத்தில் தெரிவித்தார்.
மாகாணசபை உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல் பற்றி கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவிப்பதென இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே தொலைபேசி மூலம் தூதுவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ள அதேவேளை உத்தியோகபூர்வமாக கடிதங்களை அனுப்புதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாகாணசபை உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால் 11மாகாணசபை உறுப்பினர்களையும் திருகோணமலையில் பாதுகாப்பான ஒரு இடத்தில் தங்கவைப்பதென்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

ad

ad