புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2012

இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரம் முடிவு
கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபை தேர்தல்களுக்கு இன்னும் மூன்று நாள்களேயுள்ள நிலையில் தேர்தல் பிரசார நடவடிக் கைகள் யாவும் இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவுறுத்தபடவேண்டும்.இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவது தேர்தல் சட்ட
விதிகளை மீறும் செயலாகும். என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.
இதன்படி நாளை 6 ஆம் திகதி முதல் தேர்தல் நடைபெறும் 8 ஆம் திகதி வரைவில் வேட்பாளர்களோ அல்லது அவர்களது ஆதரவாளர்களோ ஏதேனும் வழிகளில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் அவை தொடர்பாக துண்டுபிரசுரங்களையோ- அறிவித்தலையோ- விளம்பரங்களையோ முன்னெடுப்பது சட்டப்படி குற்றமாகும்.
 
 சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவோர்க்கு எதிராக பாரபட்சமற்ற முறையில் வழக்கு தொடரப்படுமெனவும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் குறிப்பிட்டார்.

ad

ad