வெள்ளி, செப்டம்பர் 07, 2012

சிரியாவில் ஈரானின் படைகள்: இரகசியமாக உதவுவது அம்பலம்
சிரியா அரச படையினருக்கு ஆதரவாக 150 படை வீரர்களை ஈரான் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈரான் ஜனாதிபதி அஹமது நிஜாத்தின் உத்தரவின் பேரிலேயே அவர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் துப்பாக்கிகள், ராக்கெட்டுகள் உட்பட பல்வேறு ஆயுதங்களையும் ஈரான் சிரியாவுக்கு வழங்கி வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் முன்பை விட சிரியாவிடம் அதிகளவு இரசாயன ஆயுதங்கள் உள்ளதாகவும், இவைகள் போராட்டக்காரர்களின் மீது பயன்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.